ஆல்வார் சிறுமி பாலியல் பலாத்காரம்.. ராஜஸ்தானுக்கு போங்க போராடுங்க.. பிரியங்கா காந்தியை வலியுறுத்தும் பா.ஜ.க.

 
பிரியங்கா காந்தி

ராஜஸ்தானில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிராக அங்கு சென்று பிரியங்கா காந்தி போராட வேண்டும் என்று பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு சாலை  ஒரத்தில் வீசப்பட்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த சிறுமி கவலைக்கிடமாக உள்ளதாக தகவல். ஆல்வார் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆளும் கட்சியான காங்கிரசுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

நரோட்டம் மிஸ்ரா

இந்நிலையில், ஆல்வார் சம்பவம் தொடர்பாக பிரியங்கா காந்தி ராஜஸ்தான் சென்று போராட வேண்டும் என்று  மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பிரியங்காவால் போராட முடிந்தால், அவர் ராஜஸ்தான் சென்று ஆல்வார் பாலியல் பலாத்காரம் வழக்கை எதிர்த்து போராட வேண்டும். ஆல்வாரில் நிர்பயா போன்ற கேவலமான சம்பவம் நடந்திருப்பது கவலைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது.

காங்கிரஸ்

பலாத்கார வழக்கை எதிர்த்து பிரியங்கா ஜி ராஜஸ்தான் சென்று போராட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே காங்கிரஸின் நான் ஒரு பெண், என்னால் போராட முடியும் என்ற பிரச்சாரம் வெற்றியடையும். நிர்பயா சம்பவத்தின் போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, தற்போது ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.