தன்னம்பிக்கையை வலுவாக வைத்திருப்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.. ராகுலை கிண்டலடித்த மிஸ்ரா

தன்னம்பிக்கையை வலுவாக வைத்திருப்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.. ராகுலை கிண்டலடித்த மிஸ்ரா

ஒருவர் தன்னம்பிக்கையை எவ்வாறு வலுவாக வைத்திருப்பது என்பதை மக்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தியை பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கிண்டலடித்தார்.

மத்திய பிரதேச உள்துறை அமைச்சராக இருப்பவர் பா.ஜ.க.வின் நரோட்டம் மிஸ்ரா. இவர் அடிக்கடி ராகுல் காந்தியை கலாய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்காக மம்தா பானர்ஜியை ராகுல் காந்தி வாழ்த்தினார்.

தன்னம்பிக்கையை வலுவாக வைத்திருப்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.. ராகுலை கிண்டலடித்த மிஸ்ரா
நரோட்டம் மிஸ்ரா

ராகுல் காந்தி டிவிட்டரில், பா.ஜ.க. நன்கு தோற்கடித்தற்காக மம்தா ஜி மற்றும் மேற்கு வங்க மக்களை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவு செய்து இருந்தார். இதனை குறிப்பிட்டு ராகுல் காந்தியயை நரோட்டம் மிஸ்ரா கிண்டல் அடித்துள்ளார். இது தொடர்பாக நரோட்டம் மிஸ்ரா கூறியதாவது:

தன்னம்பிக்கையை வலுவாக வைத்திருப்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.. ராகுலை கிண்டலடித்த மிஸ்ரா
மம்தா பானர்ஜி

ஒருவர் தன்னம்பிக்கையை எவ்வாறு வலுவாக வைத்திருப்பது என்பதை மக்கள் அவரிடமிருந்து (ராகுல் காந்தி) கற்றுக் கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தில் நாங்கள் 3 இடங்களிலிருந்து 78 இடங்களாக உயர்த்தியுள்ளோம். பா.ஜ.க.வின் வாக்கு வங்கியும் 38 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இப்போத ஒரு கட்சியாக நாம் ஏன் முடிவுகளை பார்த்த பிறகு மகிழ்ச்சியாக இருக்க மாட்டோம் என்று ஒருவர் கற்பனை செய்யலாம். அசாம் மற்றும் புதுச்சேரியை வென்றுள்ளோம். மேற்கு வங்கம், அசாம் மற்றும் தமிழ்நாட்டில் எங்களது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.