உ.பி. மகள்கள் முந்தைய அரசுகளை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம் என்று முடிவு செய்துள்ளனர்... பிரதமர் மோடி

 
பிரதமர் மோடி

உத்தர பிரதேசத்தின் மகள்கள் முந்தைய அரசுகளை மீண்டும் அதிகாரத்துக்கு (ஆட்சி) வர விடமாட்டோம் என்று முடிவு செய்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். கன்யா சுமங்கல திட்டம் அறிமுக விழாவில் பொதுமக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் பேசியதாவது: பெண்கள் மேம்பாட்டுக்காக இந்த அரசு உழைத்துள்ளது. இந்த திட்டத்தால் மாநிலத்தின் மகள்கள் பயனடையவார்கள். பயனாளிகளில் பெரும்பாலோர் சில காலத்திற்கு முன்பு வரை கணக்கு கூட இல்லாத சிறுமிகள். ஆனால் இன்று டிஜிட்டல் பேங்கிங் அதிகாரம் பெற்றுள்ளனர். 

வங்கி கணக்கு தொடங்கும் பெண்கள்

இப்போது உத்தர பிரதேசத்தின் மகள்கள் முந்தைய அரசுகளை மீண்டும் அதிகாரத்துக்கு (ஆட்சி) வர விடமாட்டோம் என்று முடிவு செய்துள்ளனர். பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெண்கள் தங்கள் படிப்பை தொடரவும், சம வாய்ப்புகளை பெறவும் நேரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதால், இதை செய்ய நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த முடிவால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். 

வங்கி கணக்கு தொடங்கும் பெண்கள்

பிரதமர் ஆவாஸ் (வீட்டு வசதி) யோஜனா திட்டத்தின்கீழ் உத்தர பிரதேசத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் சுமார் 25 லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைமுறை தலைமுறையாக பெண்களுக்கு இங்கு சொத்து இல்லை. ஆனால் இன்று முழு வீடும் அவர்களுக்கே (பெண்கள்) சொந்தம். இதுதான் உண்மையான பெண் அதிகாரம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.