அதிமுகவில் பதவிக்காக சண்டை; அதனால்தான் அக்கட்சியிலிருந்து வெளியேறினேன் - நயினார் நாகேந்திரன்

 
nainar nagendran

அதிமுகவில் பதவிக்காக சண்டை நடப்பதால் தான் நான் வெளியே வந்தேன். கட்சி வலுவாக இருக்க அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

அ.தி.மு.க. தலைமை பதவிக்கு தகுதியானவர் வரவேண்டும்- எம்.எல்.ஏ. நயினார்  நாகேந்திரன் | Nainar Nagendran says ADMK Single leadership is the right  decision

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ராமையன்பட்டி மற்றும் அரசு புது காலனி பகுதியில் 16 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய நிழல் குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நெல்லை சட்டமன்ற தொகுதியில் அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தி வருகிறேன். பாளையங்கோட்டை பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை இராமயம்பட்டி பகுதியில் கால்நடை கல்லூரி போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளது. நெல்லை சட்டமன்றத் தொகுதி மானூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவுடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதற்கான அனுமதி வழங்கி கல்லூரியும் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சுத்தமல்லி பகுதியில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுகவில் இரு தரப்பினருக்கான சண்டை நடந்து வந்ததால் தான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதி ஜனதா கட்சியின் நிலைப்பாடு. அதிமுக கோஷ்டி பூசல் விவகாரத்தில் பாஜக வருத்தம் அளிக்கிறது. அதிமுகவில் உள்ள இரு தரப்பில் யாருக்கும் பாரதிய ஜனதா கட்சி சாதகமாக செயல்படவில்லை. அதிமுக தலைமை அலுவலகம் அருகே நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடக்காமல் திமுக அரசு பார்த்திருக்க வேண்டும். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கும் அளவிற்கு திமுக அரசு சென்றிருக்கக் கூடாது. திமுகவிற்கு எதிர்க்கட்சியாகவே பாரதிய ஜனதா கட்சி உள்ளது. எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எண்ணிக்கை தேவை இல்லை. ஒருவர் எதிர்ப்பு இருந்தாலும் எதிர்ப்பு எதிர்ப்பு தான். அதிமுக வலுவாக இருக்க வேண்டுமென்றால் இணைந்த கைகளாக இருந்தால் நல்லதாக இருக்கும். அதிமுக தலைமைக்கு யார் வந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து” என தெரிவித்தார்.