நாம் தமிழர் ‘காளியம்மாள்’ கலக்குவாரா?

 

நாம் தமிழர் ‘காளியம்மாள்’ கலக்குவாரா?

சீமானின் நாம் தமிழர் கட்சியில் மிகப் பெரிய பேச்சாளராக வலம் வருபவர் காளியம்மாள்.இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். பிகாம் பட்டதாரியான காளியம்மாள் சமூக ஆர்வலரும் கூட. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கொண்டிருந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைக்க, பின்னர் அக், கட்சியில் சேர்ந்தவர். மீனவப் பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வருபவர்.

நாம் தமிழர் ‘காளியம்மாள்’ கலக்குவாரா?


காளியம்மாளின் குரல் ஒன்றும் அரசியல்வாதி போல் அல்ல.. மிகச் சமானிய குரல்தான். ஆனால், ஆண் அரசியல்வாதிகளையும் மிஞ்சும் அளவிற்கு மேடைப்பேச்சில் வெளுத்து வாங்குபவர். எளிமையான தோற்றம். யதார்த்தமான, பேச்சு.தெளிவான உச்சரிப்பு. பேச்சில் சுருக், நறுக் கேள்விகள். இதுதான் காளியம்மாள்!
கடந்த2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் ‘நாம் தமிழர்’ சார்பில் போட்டியிட்ட காளியம்மாள் 60,515 வாக்குகள் பெற்றார். இது சதவிகித அடிப்படையில் 6.33. ஆகும். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை, 2016 சட்டமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கி, தனித்து தேர்தலைச் சந்தித்தது. 1.07 விழுக்காடு வாக்குகள் பெற்று, தமிழக அரசியல் கட்சிகளில் 9-வது இடத்தைப் பிடித்தது.

நாம் தமிழர் ‘காளியம்மாள்’ கலக்குவாரா?


2019 நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. 20 தொகுதிகளில் ஆண், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கி 16,45,185 வாக்குகள் பெற்றது வாக்கு விழுக்காடு 1.07 லிருந்து 3.87 ஆக அதிகரித்தது.அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது.
இந்த நிலையில், வரும் 2021 தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 117 தொகுதிகளில் என் தம்பிகளும் 117 தொகுதிகளில் என் தங்கைகளும் சரிசமமாகப் போட்டியிடுவார்கள்’ என்றும் அறிவித்தார் சீமான்.

நாம் தமிழர் ‘காளியம்மாள்’ கலக்குவாரா?

அதுமட்டுமல்லாமல், தஞ்சாவூர், கும்பகோணம், பூம்புகார், ராமநாதபுரம், திருவாடானை, திருப்பூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, திருவையாறு, விழுப்புரம், எனத் தமிழகம் முழுக்கப் பரவலாக 47 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் பட்டியலும் வெளியானது
அந்த வகையில் கடந்தமுறை வட சென்னையில் போட்டியிட்ட காளியம்மாள், இந்தமுறை பூம்புகார் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்தமுறை கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.

நாம் தமிழர் ‘காளியம்மாள்’ கலக்குவாரா?


இதற்கிடையே 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி, தேர்தல் பணியை அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மூலம் தொடங்கிவிட்டது. தன்னை சந்தித்த நிர்வாகிகளிடம் ‘நீ தான்டா தம்பி வேட்பாளர். வேலைய பாருடா ’என்று சொல்லி சீமான் ஏற்கெனவே உத்தரவிட்டு விட்டார்.அதன் அடிப்படையில் பல்வேறு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.
இதில் சீமானுக்கு அடுத்தபடியாக பேச்சுக்களம் காண காளியம்மாள் பிரச்சார பீரங்கியாக தேர்ந்தெடுக்கப்ப்ட்டிருக்கிறார்.தமிழகம் முழுவதும் அவரது சுற்றுப்பயண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நாம் தமிழர் ‘காளியம்மாள்’ கலக்குவாரா?

தமிழகத்தின் முக்கிய பெரிய அரசியல் தலைவர்களை வரிந்து கட்டிப் பேச அவருக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது. அவரது பேச்சுக்களை இணைய தளம் மூலம் சென்றடையவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.காளியம்மாளுக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் கொடுக்கவும். சிறப்பு வரவேற்புகள் தரவும் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலோடு அவருக்கு வேறு ஒரு முக்கிய பதவி தரப்படலாம் எனவும் தெரிகிறது.- வரும் தேர்தலில் காளியம்மாள் கலக்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.