முருகனுக்கு 2 மனைவியா? 3 மனைவியா? அமைச்சரின் ஜோவியல் பேச்சால் சலசலப்பு

 
m


தமிழ் கடவுள் முருகன் குறித்து தமிழக அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது . சர்க்கரை வியாதி வரக்கூடாது என்பதற்காக முருகன் தினை மாவு என்றும் சாப்பிட்டார் என்றும்,  முருகனுக்கு இரண்டு திருமணமா? மூன்றாவது திருமணமா? என்றும் சந்தேகம் எழுப்பி கிண்டலாக ஜோதியலாக பேசுகிறேன் என்று உளறிக்கொட்டி அரங்கத்தில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.

 கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை சர்வதேச சிறுதானிய கருத்தரங்கம் நடந்தது.     எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியும் நடந்தது.  இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று துவக்கி வைத்தார்.  

p

 பின்னர் இந்த கருத்தரங்கில் பன்னீர்செல்வம் பேசிய போது,   வேளாண் பல்கலை குறித்தும் உழவர் நலன் குறித்தும் சிறுதானிய உணவுகள் குறித்தும் பேசினார். அப்போது தமிழ் கடவுள் முருகனை அவமதிக்கும் வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார். 

 முருகன் சர்க்கரை வியாதி வரக்கூடாது என்பதற்காக திணையை சாப்பிட்டார்.   அவர் இரண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டா அல்லது மூன்றா? ஆமாம் சாமி இரண்டு திருமணம் தான்.   அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக முருகன் தினை மாவு சாப்பிட்டார் என சொல்லிக் கொண்டே வந்தவர், கூட்டத்தில் சலசலப்பு எழுந்ததை கவனித்து ,  ஏதோ சாதாரணமாக கிண்டலாக ஜோதியலாக பேசுகிறேன் என்று உளறி கொட்டினார்.

 திணையை முருகனை எப்போது கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை என மீண்டும் உளறி கொட்டி,   அரங்கத்தில் எழுந்த சலசலப்பு மூலம் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கு மேல் பேசுவதை தவிர்த்து விட்டார்.