பார்ர்ராரா.. பேரவையிலேயே முனுசாமி பேரம்! அம்பலப்படுத்தும் ஓபிஎஸ் தரப்பு

 
k

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.  இதில் ஓபிஎஸ் அணி திமுகவின் பி டீம்  என்று இபிஎஸ் அணியினர் விமர்சித்து வருகின்றனர்.  பதிலுக்கு திமுகவின் பி டீம்  என்று இபிஎஸ் அணியை ஓபிஎஸ் அணியினர் விமர்சித்து வருகின்றனர்.

 இந்த நிலையில்,  சட்டப்பேரவையில் அடித்துக் கொண்டால் தான் அதிகாரத்தில் இருக்க முடியும்.  ஒரு கட்டத்தில் உங்களை(திமுக) எதிர்த்தே ஆக வேண்டும்.  திமுக அதிமுக அடித்துக் கொண்டிருந்தால்தான் நாம் ஆளுங்கட்சி -எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என்று அதிமுக எம்எல்ஏ கேபி முனுசாமி பேசி இருப்பதை  குறிப்பிட்டு,  திமுகவின் பி டீம் இபிஸ் அணி என்று விமர்சித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.

m

தி.மு.க. -அ.தி.மு.க. என்னும்  நாம் இருவரும் அடித்துக் கொண்டால் தான் நாம்  ஆளுங்கட்சி -எதிர்கட்சி என்ற நிலையில் தொடர்ந்து இருக்க முடியும் என்று சட்ட மன்றத்தில் கே.பி.முனுசாமி பேச்சு. பார்ர்ராரா இதன் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையில் ஒரு தரகராக இருந்து  செயல்பட தனக்கு வாய்ப்பு வேண்டும் என்பதை வெளிப்படையாகவே முனுசாமி விண்ணப்பித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி  நாம் இருவரும் ஒரு ஒப்பந்த அரசியலை முன்னெடுப்போம் என்றும் பேரத்தை பேரவையிலேயே தொடங்கியிருக்கிறார். ஆக கொடநாடு கொலை கொள்ளை விவகாரம்.. எடப்பாடி சகாக்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை மக்களை ஏமாற்றும் நாடகங்களாக எடுத்துச் செல்வோம் என்பது தான்
ஏற்கனவே பா.ம.க.வுக்கு தரகு வேலை பார்த்ததாக அம்மாவால் குற்றம் சுமத்தப்பட்டு கட்சியில் இருந்தே ஒதுக்கி வைக்கப்பட்ட முனுசாமி பேச்சின் சாராம்சமாகும்.

குறிப்பு:
இவர் தி.மு.க.ஆட்சிக்கு வந்ததிற்கு பிறகு கோடிகளை குவிக்கும் இரண்டு குவாரிகளையும் கூட்டுறவுத் துறையின் சார்பில் ஒரு பெட்ரோல் பங்க்கும் தனக்காக பெற்றிருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. இப்பச் சொல்லுங்கப்பா.. தி.மு.க.வுக்கு யார் B டீம் ? என்று கேட்கிறார்.