முழு நேர சுற்றுலா, பகுதி நேர அரசியல்.. ராகுல் காந்தியை தாக்கிய முக்தர் அப்பாஸ் நக்வி

 
ராகுல் காந்தி

பழம் பெரும் கட்சியின் தலைவர் முழு நேர சுற்றுலா, பகுதி நேர அரசியின் பழைய பழக்கத்தை கொண்டுள்ளார் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தாக்கினார்.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் சில கட்சிகள் காட்டும் அரசியல் சதி தீவிரமான கவலை அளிக்கிறது. இந்த மாபெரும் பழமையான கட்சியின் (காங்கிரஸ்) புத்தம் புதிய தலைவர் (ராகுல் காந்தி) முழுநேர சுற்றுலா, அரசியல் பாசாங்குத்தனம் மற்றும் பகுதி நேர அரசியலின் பழைய பழக்கத்தை கொண்டுள்ளார். பஞ்சாபில் உள்ள தனது அரசாங்கத்தால் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டிலிருந்து கவனத்தை திசை திருப்ப கட்சி எவ்வாறு முயற்சிக்கிறது என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 

எதிர்க்கட்சியினரிடம் தவறு இருப்பதால்தான் விசாரணையில் பங்கேற்க விரும்பவில்லை.. முக்தர் அப்பாஸ் நக்வி குற்றச்சாட்டு
பா.ஜ.க. எப்போதும் களத்தில் செயல்படும் கட்சி. அது தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுமக்களின் அக்கறைக்குரிய விஷயங்களாக இருந்தாலும் சரி எங்கள் தொண்டர்கள் எப்போதும் மக்களுடன் இணைந்திருப்பதோடு, ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காணும் வகையில் பணியாற்றுகிறார்கள். தேர்தலை பொறுத்தவரை, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நாட்டின் சில பகுதிகளில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

எதிர்க்கட்சியினரிடம் தவறு இருப்பதால்தான் விசாரணையில் பங்கேற்க விரும்பவில்லை.. முக்தர் அப்பாஸ் நக்வி குற்றச்சாட்டு

எனவே பா.ஜ.க.வினர் தேர்தலுக்கு எப்போதும் தயாராகவே உள்ளனர். அதனால்தான் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் பா.ஜ.க. 70 சதவீத இடங்களில் வெற்றிக் கொடியை ஏற்றியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி கடந்த டிசம்பர் மாத இறுதியில் குறுகிய கால தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்று இருந்தார்.