எடப்பாடி மூஞ்சியை காண விருப்பமில்லாமல் மோடி..
சென்னை வந்த பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் தனித்தனியாக 10 நிமிடங்கள் வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி இதுவரையும் தனித்தனியாக சந்தித்து பேசவில்லை. இதன் பின்னர் இருவரும் பிரதமர் மோடியை வழியனுப்ப சென்னை விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் வரைக்கும் காத்திருந்தார்கள். பிரதமர் மோடியிடம் தனியாக பேசலாம் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் கடைசி வரைக்கும் அது நடக்கவே இல்லை.
வழியனுப்பும் விழாவில் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து பிரதமர் மோடி வணக்கம் செய்திருக்கிறார். அப்போது அங்கு நின்ற ஓ. பன்னீர்செல்வத்தை பார்த்து பிரதமர் மோடி தோளில் தட்டிக் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், எடப்பாடியை பார்த்து எரிச்சலடைந்த மோடி.. என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறார்
2014- மோடி வேண்டும் என்று இந்தியாவே தீர்ப்பெழுதிய போது..
தமிழகமோ எங்களுக்கு
மோடி வேண்டாம்
லேடியே போதும் என தீர்ப்பு தந்தது.
2019- மோடியே
நீடிக்க வேண்டும் என இந்தியா தீர்ப்பெழுதிய போது
தமிழகமோ
மோடி வேண்டாம் என்பதையே திரும்பவும் தீர்ப்பாக்கியது..
2024-
இந்தியாவின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும்
இந்த முறை
மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமா என தமிழக மக்கள் பரிசீலனை செய்வதற்கு முன்பாகவே
பிரதான கட்சியான அ.தி.மு.க.வை உடைத்து மோடிக்கு தமிழகத்தில் இருந்து எந்த ஆதாயமும் கிடைக்க கூடாது
என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி என்றால்..
அந்த துரோகியின் மூஞ்சியை காண விருப்பமில்லாமல் மோடி கடந்து போயிருப்பது நியாயம் தானே...? என்று கேட்கிறார்