திடீர்னு என்னாச்சு... ஒரே அடியில் மத்திய, மாநில அரசுகளை விளாசிய கமலின் மநீம!

 
கமல்

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை-பெங்களூரு இடையேயான சாலைப் போக்குவரத்து மேம்பாட்டிற்காக புதிதாக விரைவுச் சாலை அமைக்கப்படும் என 2018இல் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் - சுங்கச்சாவடி முதல், வாலாஜாபேட்டை வரை உள்ள 4 வழிப்பாதையை, 6 வழிப்பாதையாக மாற்ற ரூ.1,188 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 2,600 ஹெக்டேர் நிலம் தேவை எனவும், அதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 1,000 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டது. 

Events - MAKKAL NEEDHI MAIAM | மக்கள் நீதி மய்யம்

ஆனால் இதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது. இதன் காரணமாக பணிகள் தாமதமாகின்றன. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றம், நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஆகியவை திட்டமிட்ட காலத்திற்குள் நடைபெறாததால் நெடுஞ்சாலைப் பணிகளை கைவிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பின்மையும் காரணமாகச் சொல்லப்படுகிறது. தேவையான நிலம் கிடைக்கவில்லை, குவாரிகள் மூடப்பட்டன, தமிழக மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடமிருந்து அனுமதி கிடைக்காதது போன்ற பல காரணங்களும் இதில் அடங்கும். 

nhai: அசுர வேகத்தில் உருவாகும் தேசிய நெடுஞ்சாலைகள்! - 3,979 km of national  highways constructed in 2019-20 fy | Samayam Tamil

இதனால் பணிகளை ரத்து செய்து, ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என்ற முடிவு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் ஒரு சில திட்டங்கள் 2016இல் தொடங்கப்பட்டன. இருப்பினும் இதுவரை நிலம், மண் மற்றும் பிற அனுமதிகள் ஏதும் முறையாக கிடைக்கவில்லை என நெடுஞ்சாலை ஆணையம் தெரிவிக்கிறது. இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் 25 ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 

தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்! | nakkheeran

ஆனால்  சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவை எடுப்பதே முறையானது. தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சியை முதன்மையான நோக்கமாக கொண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி சாலை விரிவாக்கத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.