“கோழைச்சாமிக்கு மோடியை எதிர்த்து பேச தைரியம் இருக்கா?”- மு.க.ஸ்டாலின்
“வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!” என திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 3 முறை முழக்கமிட்டார்.
திமுக செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1.50 லட்சம் வாக்குகளை இழந்துள்ளது அதிமுக. 2019 ஆம் ஆண்டு 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 2024 ஆம் ஆண்டு 34 தொகுதிகளில் போட்டியிட்டது. 14 தொகுதிகளில் கூடுதலாக போட்டியிட்ட அதிமுகவின் வாக்கு 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி வாக்கு சதவீத கணக்கு ஒன்றை சொல்கிறார். பழனிசாமியின் கணக்கு, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு கூட்டம், வகுத்தல் கணக்கே தெரியாது என நம்பி பொய்க்கணக்கை அவிழ்த்து விட்டிருக்கிறார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அதிமுகவினரே நம்ப மாட்டார்கள்.
கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பாஜகவை கண்டித்தாரா? அம்பேத்கரை கொச்சைப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? பிரதமரை எதிர்த்து பேசும் துணிச்சல் அவருக்கு இருக்கா? வரலாற்றுக் காலத்துல சோழர்கள் ஆட்சிய எப்படி பொற்காலம்னு சொல்றாங்களோ... அதுமாதிரி மக்களாட்சி மலர்ந்த பிறகு, திமுக ஆட்சிக்காலம்தான் தமிழ்நாட்டின் பொற்காலம்னு சொல்லணும். தமிழ்நாட்ட வளர்த்தெடுத்தவங்க இந்த கருப்பு, சிவப்புக்காரங்கனு சொல்லணும்... 7 வது முறையாக ஆட்சி அமைப்பதே நமது இலக்கு. 200 தொகுதிகளில் திமுக வெல்லும்.202ல் திமுக வெற்றி உறுதி” என்றார்.