“போடு தோப்புக்கரணம்னு பாஜக சொன்னா.. இந்தா எண்ணிக்கோன்னு சொல்லிட்டே அதிமுக தோப்புக்கரணம் போடுவாங்க”

 
eps and modi

“போடு தோப்புக்கரணம்னு பாஜக சொன்னா.. இந்தா எண்ணிக்கோன்னு சொல்லிட்டே அதிமுக தோப்புக்கரணம் போடுவாங்க!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin


காங்கேயத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ தன்னுடைய ஆட்சியின் சாதனை என சொல்வதற்கு பிரதமர் மோடியிடம் எதுவும் இல்லாத காரணத்தால், மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து கணக்கு காட்ட பார்க்கிறார். நம்முடைய இளைஞர்களை பகோடா விற்க சொல்கிறார் பிரதமர் மோடி. நீங்க தேடிப் போற ஒவ்வொரு வீட்டுலயும், நம்ம அரசோட திட்டங்களால பயனடைந்தவர்கள் இருப்பாங்க.. ஜி20 மாநாடோ, சந்திரயான் வெற்றியோ பாஜகவின் சாதனை அல்ல 

தொகுதி மறுவரையறைக்கு பின் தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையலாம். அதிமுகவை பயமுறுத்தி கூட்டணியில் வைத்துள்ளது பாஜக. ஊழல் வழக்கு பயம் காரணமாகவே அமித்ஷாவை ஈபிஎஸ் சந்தித்தார். அதிமுகவும், பாஜகவும் பகையாய் இருப்பது போல நடித்து, உள்ளுக்குள் நட்பு பாராட்டுகிறார்கள். மிகப்பெரிய வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை நிறைவேற்றப்பட்டு விட்டது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கட்சி, பாஜக. பெண்கள் மீது உண்மையான அக்கறையின்றி தேர்தல் நாடகமாடும் பாஜகவை, 33% இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வராமல் ஏமாற்றும் பாஜகவை டெப்பாசிட் இழக்கச் செய்ய வேண்டும். ஒன்றிய பாஜக அரசால் சீரழிக்கப்பட்ட திருப்பூர், கோவையில் உள்ள தொழிற்சாலைகளை சரிவில் இருந்து மீட்பதற்கான வேலைகளை திமுக அரசு செய்து வருகிறது. டாலர் சிட்டியான திருப்பூரையும், மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையையும் நிச்சயம் மீட்டெடுப்போம்” என்றார்.