கருணாநிதி பிறந்த நாள்… பொதுமக்களுக்கு உதவி செய்ய தி.மு.க-வினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 

கருணாநிதி பிறந்த நாள்… பொதுமக்களுக்கு உதவி செய்ய தி.மு.க-வினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 97வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி பொது மக்களுக்கு உதவிகள் செய்யும்படி தி.மு.க-வினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் உயிருடன் கலந்திருக்கும் கலைஞரின் 97வது பிறந்தநாளான நாளை (ஜூன் 3) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி – வட்ட – பேரூர் – கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் – திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

கருணாநிதி பிறந்த நாள்… பொதுமக்களுக்கு உதவி செய்ய தி.மு.க-வினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!
கொரோனா பரவலால், குறிப்பாக சென்னையில் தலைவர் கலைஞர் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம். கழகத் தலைவர் பொறுப்பில் உள்ள நான் தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் யாரும் அணிதிரண்டிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கனவே அறிவித்தற்கிணங்க நலத்திட்ட உதவிகளை தி.மு.க நிர்வாகிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் இடங்களிலிருந்தே சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து, தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியும் உதவிகள் செய்தும் தலைவர் கலைஞரின் புகழ் போற்றுவோம்” என்று கூறியுள்ளார்.