எம்.கே.ஸ்டாலின்... ஏறி வந்த ஏணிப்படிகள்

 
z

ரை நூற்றாண்டு கால அரசியல் உழைப்பின் வெகுமதியாக தமிழ்நாட்டின் முதல்வராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்.   அவரது அரசியல் வாழ்க்கையின் காலவரிசை இது.

க்ஷ்

1967ஆம் ஆண்டில்  தனது 14வயதில் அரசியல் வாழ்க்கையை துவங்கிய ஸ்டாலின், 1967தேரதலில் திமுகவிற்காக பிரச்சாரம் செய்தார். 

1973ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1976ஆம் ஆண்டில் எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் போலீசரால் கடுமையாக தாக்கப்பட்டார்.

1984ஆம் ஆண்டில் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளாராக நியமிக்கப்பட்டார். மேலும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1989ஆம் ஆண்டில் ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுகவின் தம்பிதுரையை எதிர்த்து போட்டியிட்டு, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்று  முதல்முறையாக தமிழக சட்டசபைக்கு தேர்வானார்.

ட்

1991ஆம் ஆண்டில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1996ஆம் ஆண்டில் ஆயிரம்விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார்.

1996ஆம் ஆண்டில் சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெயர் பெற்றார்.

2001ஆம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வானார். 

2001ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சென்னை மாநகர மேயராக தேர்வானார். 

ஜ்ஜ்

2003ஆம் ஆண்டில் திமுக பொதுக்குழுவால் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006ஆம் ஆண்டில் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, உள்ளாட்சி மற்றும் ஊரகவளர்ச்சி துறை அமைச்சரானார்.

2008ஆம் ஆண்டில் திமுகவின் பொருளாளராக தேர்வானார் ஸ்டாலின். 

 2009ஆம் ஆண்டில் தமிழகத்தின் துணைமுதல்வராக பொறுப்பேற்றார் ஸ்டாலின். 

ஜ்

 2011ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற ஆயிரம்விளக்கு தொகுதியை தவிர்த்து, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2016ஆம் ஆண்டில் சென்னை கொளத்தூர் தொகுதியில் இருந்து மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின், இதுவரை தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் வலுவான எதிர்கட்சியின் சார்பில் எதிர்கட்சி தலைவரானார்.

2017ஆம் ஆண்டில் திமுகவின் செயல்தலைவராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2018ஆம் ஆண்டில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மறைவிற்கு பிறகு, அக்கட்சியின் தலைவராக ஸ்டாலின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021ஆம் ஆண்டில்  சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார்.

2021ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியின் தலைவராக போட்டியிட்டு, வெற்றிபெற்று 2021 மே 7 ஆம் தேதி அன்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

க்க்

படங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி  தொடங்கியிருக்கிறது.  மார்ச் 12-ம் தேதி வரை, சென்னை பாரிமுனையிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்தக் கண்காட்சி நடபெறுகிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.