திட்டம் சறுக்கியது எங்கே?... முதல்வர் ஸ்டாலின் செம அப்செட் - உடனடி ரிப்போர்ட் கேட்டு உத்தரவு!

 
ஸ்டாலின்

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வழங்கி வருகிறது. கரும்புடன் இணைந்த 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தை ஜனவரி 4ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டம் ஆரம்பத்தில் பெரும் வரவேற்பு பெற்றது. பணம் கொடுக்காவிட்டாலும் பொருட்கள் அனைத்தும் தரமாக இருக்கிறது என பலரும் மகிழ்ச்சியாகக் கூறினர். ஆனால் சில தினங்களாக தரமற்ற பொருட்களை வழங்குவதாக வீடியோக்களும் செய்திகளும் இணையத்தில் வலம் வர ஆரம்பித்தன.

Stalin slams Minister Velumani, says people will give befitting reply to  ruling party- The New Indian Express

குறிப்பாக புளியில் பல்லி இறந்து கிடந்த போட்டோக்களும் வீடியோக்களும் பயங்கரமாய் வைரலாகின. கடந்த ஆறு மாத காலமாக திமுக அரசு கட்டி காப்பாத்திவந்த புகழுக்கு இது சிறு கரும்புள்ளி தான் என சொல்ல வேண்டும். துரும்பு கிடைத்தாலே அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் திமுக அரசை காய்ச்சி எடுத்து விடுவார்கள். பல்லியே கிடைத்துவிட்டது. சும்மா விடுவார்களா என்ன? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியோ கையில் உருகிய வெல்லத்துடன் வந்து பிரஸ்மீட் கொடுக்க, ஓபிஎஸ் அறிக்கைகளாக விட்டு தள்ளினார். இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க தமிழக வணிகர்களும் கோபமடைந்தனர்.

தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி ரூ.30 கோடி ஊழல் : பழனிசாமி பாய்ச்சல் |  Dinamalar Tamil News

காரணம் பொங்கல் பொருட்களில் பாதிக்கு மேல் வடமாநிலங்களிலிருந்து பெறப்பட்டவை. தமிழக வணிகர்களைப் புறக்கணித்து இந்தி மாநில வணிகர்களை வாழ வைக்கிறதா என கொந்தளித்தனர். ஆனால் உண்மையில் அனைத்து மாநிலங்களிலிருந்துமே பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் பொங்கலுக்கான பொருட்களை அரசு வாங்கியுள்ளது. அதேபோல துவரம் பருப்பு, பாசிப்பருப்புகளை சரவணா ஸ்டோரில் கொள்முதல் செய்திருக்கிறது. இவ்வாறு அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்துகட்டியே வாங்கியிருக்கிறார்கள்.

ஒன்னுத்துக்கும் ஆகாத பொங்கல் பரிசு தொகுப்பு… பூரா வண்டு… கேட்டா அடிக்க  வராங்க!! | pongal parisu is not in good quality said ramanathapuram women

டெண்டரில் யார் குறைந்த விலைக்கு கேட்டார்களோ அவர்களுக்கு கொடுத்தோம் இதில் என்ன தவறு என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் அப்படியே ஆஃப் ஆனது. ஆனாலும் அந்த தரமற்ற பொருட்கள் விவகாரம் தான் விஸ்வரூபம் எடுத்தது. அரசு எந்தவிதமான விளக்கமும் சொல்ல முடியாமல் தவித்தது. இதனால் கடும் அப்செட்டான முதல்வர் ஸ்டாலின் உடனே களமிறங்கினார். அனைத்து பொருட்களும் தரமாக கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஆட்சியர்கள் என அனைவருக்கும் உத்தரவிட்டார். அதற்கு வெள்ளோட்டமாக அடுத்த நாளே ராயபுரத்திலுள்ள ஒரு ரேஷன் கடையில் திடீரென ஆய்வும் மேற்கொண்டார்.

ஸ்டாலின் ஆய்வு

இருப்பினும் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் மேலும் விமர்சனங்களே எழுந்தன. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற முதல்வார் ஸ்டாலின் இந்த திட்டம் சொதப்பியது ஏன்? அதிகாரிகள் இதை கவனிக்காதது ஏன்? எங்கே தவறு நடந்தது என்று முதல்வர் ஸ்டாலின் விசாரணை நடத்த கூறியுள்ளதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நாம் வழங்கும் பொருட்களை வைத்து பொங்கல் கொண்டாட முடியாத நிலை இருந்தால் என்ன அர்த்தம்? எனக்கு உடனடியாக ரிப்போர்ட் வேண்டும் என அதிகாரிகளுக்கு கோபத்தில் ஆணையிட்டுள்ளார்.