மு.க.ஸ்டாலின் -70: அவரை பற்றிய 70 அரிய தகவல்கள்

 
mk

1. கலைஞர் மு.கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு 1.3. 1953ல் மூன்றாவது மகனாக பிறந்தார் ஸ்டாலின் 

2.   நான் பெற்ற பிள்ளைகளில் ஸ்டாலின் தான் பொறுமையான பிள்ளை என்று அடிக்கடி நெகிழ்வார் தயாளு அம்மாள்

3. அய்யாத்துரை என்றே பெயர் சூட்ட க முடிவு எடுத்திருந்தார் கலைஞர் கருணாநிதி. அய்யா என்றால் தந்தை பெரியாரையும், துரை என்றால் பேரறிஞர் அண்ணாதுரை என்பதையும் நினைவூட்டுவதற்காகவே அந்த பெயரை சூட்ட நினைத்திருந்தார்.

4. சென்னை கடற்கரையில் நடந்த ரஷ்ய நாட்டு தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரங்கல் கூட்டத்தில், தான் கலந்துகொண்டபோது பிறந்ததால், தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டி அழகு பார்த்தார் கலைஞர் கருணாநிதி.   இரங்கல் கூட்டத்தில், "என் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன்" என்று அறிவித்தார் கருணாநிதி.  

5. விளையாட்டு மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர் ஸ்டாலின். இவரின் விருப்பத்திற்குரிய விளையாட்டுகள் கிரிக்கெட், பாட்மிட்டன் ,செஸ்.

f

6. ஸ்டாலின் நடித்த முதல் நாடகம் 'முரசே முழங்கு'. 1971, பிப்ரவரி 3 அன்று சைதை அப்பாவு நகரில் அரங்கேறிய நாடகத்துக்குத் தலைமை தாங்கியவர் எம்.ஜி.ஆர்.

7. கல்லூரி பருவத்தில், நாடகத்தில் கலைஞர் கருணாநிதியாக வேடமிட்டு நடித்திருந்தார் மு.க.ஸ்டாலின்

8. 1972-75ல்  மாணவனாகப் படித்து, மிசா சிறைவாசியாகத் தேர்வு எழுதிய சென்னை மாநிலக் கல்லூரியின், 2022ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமையேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

9. சாப்பாட்டில் அதிக காரம், எண்ணெய், கொழுப்பு சத்துக்கள் சேர்த்துக்கொள்ள மாட்டார்.

10.  நடைபயிற்சி, யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு -இதுதான் அவரது இளமையின் ரகசியம்

11. காய்கறிகளில் கிழங்குகளை தவிர மற்ற அனைத்தும் விரும்பி சாப்பிடுவார்

12 வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம் விரும்பி சாப்பிடுவார்

13 சாப்பாட்டில் எப்போதும் ஒரு கப் தயிர் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்

14.  1975-ல்   துர்கா ஸ்டாலினுடன் திருமணம் . அப்போது அவருக்கு வயது 22. 

15.  முரசொலி மாறன் மூலம் தான் திருமண சம்மந்தம் அமைந்தது. பார்த்த முதல் பெண்ணே பிடித்துப் போக திருமணம் செய்து கொண்டார் ஸ்டாலின். 

sm

16. 1975-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி அவருக்கும், துர்காவுக்கும் சென்னையில் நடந்த திருமணம் பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதிகள் வி.வி.கிரி, நீலம் சஞ்சீவரெட்டி, மத்திய மந்திரி ஜெகஜீவன்ராம், ம.பொ.சி. உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  ஒரு மாநாடு போலவே நடந்தது அந்த திருமணம்.

17.  திருமணம் முடிந்து சென்னைக்கு துர்கா ஸ்டாலினை அழைத்து வரும் போது, தாய் வீட்டை பிரிந்து வருவதை நினைத்து அழுதாராம். அதற்கு ஸ்டாலினோ, இன்னும் அழ வேண்டியது நிறைய உள்ளது என சொன்னாராம். நிச்சயம் இப்படி யாரும் ஒரு ஆறுதலை புதுப்பெண்ணுக்கு சொல்ல முடியாது. 

18  திருமணத்துக்குப் பிறகு தான் மிசா என பல சிக்கல்களில் சிக்கினார் மு.க.ஸ்டாலின்.  

19. திருமணம் ஆனதும் மனைவியிடம் மை பொட்டு கைக்காதே. என் அம்மா மாதிரி குங்கும பொட்டு வை என்று மனைவிக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளார்.

tv

20.  சென்னை மாநகரத்தின் மேயர் ஆனதும் ஸ்டாலின் 1997ல் தனிக்குடித்தனம் சென்றார். அதுவரை கூட்டுக்குடும்ப  வாழ்க்கைதான்.

21.  வேளச்சேரியில் வீடு கட்டி அங்கே குடியேறி தனிக்குடித்தனம்

22.  ரிலீஸ் ஆகும் ஒரு படத்தை கூட விடாமல் பார்க்கும் சினிமா ஆர்வலர்.  பெரும்பாலும் இரவு காட்சிதான்.

23  பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர்தான் ஸ்டாலின் அடிக்கடி போகும் தியேட்டர்

24. மூன்று மாத குழந்தையுடன் துர்கா ஸ்டாலின் தாய் வீட்டிற்கு சென்றிருந்த நேரம்.  அங்கே சென்ற ஸ்டாலின் மனைவியை மட்டும் அழைத்துக்கொண்டு மயிலாடுதுறைக்கு சினிமா பார்க்க சென்றுவிட்டார்.  பாதி படம் பார்த்துக்கொண்டிருந்தபோது  குழந்தை ரொம்ப அழுகுது. பயமா இருக்குது என்று தகவல் வரவும், பதறி அடிச்சிக்கொண்டு ஓடுகிறார்கள்.  குழந்தை போட்ட தொடர் அழுகை சத்தத்தில் தெருவே கூடி நின்றிருக்கிறது.

st

25.  புகாரி ஓட்டலில் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும்

26.  திருமணத்திற்கு பின்னர் ஸ்டாலினுக்கு ஆடைகள் செலக்ட் செய்வது துர்காதான்

27. நாட்டுக்கோழி வெள்ளக்குருமா அதிகம் விரும்பி சாப்பிடுவார்.  அசைவத்தில் மீன் விரும்பி சாப்பிடுவார். 

28.  ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடந்தாலும் ஸ்டாலினும் துர்க்காவும் முதன் முதலாக பேசிக்கொண்டது செப்டம்பர் 3ம் தேதிதான்.  அதுவரைக்கும் ஸ்டாலின் எதிரே வரும்போது துர்கா அந்த பக்கமும், இந்த பக்கமும் ஓடியிருக்கிறார்.  கூச்ச சுபாவம்.  

29. கணவர் சாப்பிட்ட தட்டில்தான் சாப்பிடவேண்டும் என்று திருமணமான புதிதில் காத்திருந்திருக்கிறார் துர்கா.  அரசியலில் இருப்பதால் அவர்கள் எப்போது வருவார்கள் போவார்கள் என்று தெரியாது. நாம் சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு எடுத்து வைத்துவிடுவோம் என்று சொல்லி இருக்கிறார் மாமியார் தயாளு அம்மாள்.

30. மகன் உதயநிதி, மகள் செந்தாமரை. இருவருமே இரண்டு கண்கள் போல இருக்கிறார்கள் என்கிறார் மு.க.ஸ்டாலின் .  

s6

31.  உதயநிதி, செந்தாமரை இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்கள் தங்கள் காதலை முதலில் வீட்டில் சொல்லி ஓகே வாங்கியது அப்பாவிடம்தான்.

32. 1967-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 14 வயதிலேயே திமுகவுக்காகப் பிரசாரத்தில் ஈடுபட்டவர் மு.க.ஸ்டாலின். படிக்கும் வயதில் இளைஞர் தி.மு.க என்ற அமைப்பை நிறுவி நடத்தி வந்தார் மு.க.ஸ்டாலின்.

33. கருணாநிதியின் அரசியல் வாரிசாக அவரால் அறிவிக்கப்பட்டார் ஸ்டாலின். தற்போது திமுகவின் தலைவராக உள்ளார்.

34. கலைஞர் கருணாநிதியால்,  ’முத்துவேல் கருணாநிதி எனும் நான் தமிழ்நாடு முதலமைச்சராக’ என்று ஸ்டாலின் பதவியேற்கும் போது  பார்க்கமுடியாமல் போனதால், அடிக்கடி கலைஞர் நினைவிடத்துக்கு சென்று பார்த்து வருகிறார். 

35.  கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார்.

mi
  
36. 1973-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் பட்டம் பெற்றார். ஆகஸ்ட் 1, 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகம் மு.க. ஸ்டாலினுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

37. பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது  நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரத்தில் திமுக இளைஞரணி என்ற அமைப்பினை தொடங்கினார்.

38.  14 வயதில், 1967-ல் தனது தாய்மாமன் முரசொலி மாறனுக்காக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்தார்

39.  1973-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

40.  1976-ஆம் ஆண்டு அவசர நிலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

m7

41.    சிறையில் இருந்தபோது அவர் கடுமையாக தாக்கப்பட்டார்.   அவரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்து சி. சிட்டிபாபு காயங்களாலும், காவல் துறையின் சித்திரவதைகளாலும் அவரைப் பாதுகாக்கும் போது இறந்து போனார்

42  சிறையில் இருந்த போதிலும் கூடத் தனது இறுதியாண்டு பி.ஏ. தேர்வுகளை எழுதி முடித்தார்

43.  திமுக இளைஞர் அணியை உருவாக்கினார். 1982-ஆம் ஆண்டு தொடங்கி திமுகவின் இளைஞரணி செயலாளரான மு.க.ஸ்டாலின் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்துள்ளார்

44.  சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1989-இல் மீண்டும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற  தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

45. திமுக அரசு 1991-ஆம் ஆண்டு தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடிப்பதற்குள் கலைக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு அதே சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட அவர், அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஏ.கிருஷ்ணசாமியிடம் தோல்வியடைந்தார். மீண்டும் 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற  தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார் மு.க.ஸ்டாலின்.

46. 2003-இல், மு.க.ஸ்டாலின் திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். 2011-ஆம் ஆண்டு, மு.க.ஸ்டாலின் முதல் முறையாகத் தனது ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து சென்னை புறநகரில் உள்ள கொளத்தூர் தொகுதிக்கு மாறி போட்டியிட்டார்.

47.  2003-இல், மு.க.ஸ்டாலின் திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். 2011-ஆம் ஆண்டு, மு.க.ஸ்டாலின் முதல் முறையாகத் தனது ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து சென்னை புறநகரில் உள்ள கொளத்தூர் தொகுதிக்கு மாறி போட்டியிட்டார்.

48  1996-ஆம் ஆண்டு நடந்த சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு நேரடியாக மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைத் ஸ்டாலின் பெற்றார். 

47.   மேயர் பதவியில் இருந்தபோது துப்புரவுப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து சென்னை நகரத்தின் குப்பை அள்ளும் முறைகளை நவீனப்படுத்தினார். 

49.  2001-ஆம் ஆண்டு 2-ஆவது முறையாக அவர் சென்னை மக்களால் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

me

50.  2002-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்ற சட்டத் திருத்தத்தால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை  வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்.

51. மாணவராக இருந்தபோது பள்ளி நிதி பெறுவதற்காக எம்.ஜி.ஆரை சந்திக்க சத்யா ஸ்டுடியோவுக்கு சென்றிருக்கிறார். நன்றாக படிக்க வேண்டும் என்று என்னிடம் உரிமையுடன் கூறுவார். 

52.  எம்.ஜி.ஆர் நடித்த படம் வெளியாகும்போது முதல் நபராக படத்திற்கு செல்வார் ஸ்டாலின்.  எம்.ஜி.ஆரும் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து திரைப்படம் எப்படி இருந்தது என கேட்பார். 

53.   முதல் நாடகமான 'முரசே முழங்கு' திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டு, வெற்றிவிழாவும் கண்டது. 

sss

54. முரசே முழங்கு’வை தொடர்து 'திண்டுக்கல் தீர்ப்பு',  'நீதி தேவன் மயங்குகிறான்', 'நாளை நமதே' என திராவிட கொள்கைகளை விளக்கும் பல்வேறு நாடகங்களில் அரசியல், கலை எனக் கலந்து நடித்தார். 

55. இதேபோல், திரைத்துறையிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஸ்டாலின், 'ஒரே இரத்தம்', 'மக்கள் ஆணையிட்டால்' ஆகிய திரைப்படங்களிலும் 'குறிஞ்சி மலர்' என்ற நெடுந்தொடரிலும் நடித்தார்

56. 1975-ம் ஆண்டு மத்திய இந்திரா காந்தி அரசால் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது, 1976-ம் ஆண்டு 'மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் 1977 வரை சுமார் ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார்.

57. சென்னையில் இருந்தாலும், வெளியூர்களுக்கு சென்றாலும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கமாட்டார்.

58.  கோடை காலம் வந்துவிட்டால் பேரன், பேத்திகளோடு குறைந்தபட்சம் 3 நாட்களாவது சுற்றுலா சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவார்

 59.  அரசியலில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வீட்டிற்கு சென்றுவிட்டால் பேரன், பேத்திகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் கொஞ்சி விளையாடுவார்

60. விமான பயணத்தை தவிர்த்து, ரயில் மற்றும் காரில் தரைவழி பயணத்தை அதிகம் விரும்புவர்

pe

61.  அமெரிக்கா, துபாய், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்.

62. வெளியூர் செல்லும் போது ஓட்டல் உணவுகளை பெரும்பாலும் தவிர்த்து, நிர்வாகிகள் இல்லங்களில் இருந்து வரும் உணவுகளையே சாப்பிடுவார்.

63. கூச்ச சுபாவம் உடைய ஸ்டாலின், மேயராகிய பின்பு  கூச்சத்தை நீக்கி பொதுவிடங்களில் பேசக் கற்றுக்கொண்டார்

64. சென்னை மேயராக வருவதற்கு முன்பு தனது காரை தானே ஓட்டினார்

65. வி.பி.சிங் பிரதமராக இருந்த போது ஸ்டாலினின் கட்சி செயல்பாட்டையும், ஆர்வத்தையும் பாராட்டியுள்ளார்.

66. நிர்வாகிகள்  வம்பு வழக்கில் மாட்டிக்கொண்டால் முதலில் விசாரித்து நிர்வாகிகள் மீது தவறில்லை என்றால் மட்டுமே குரல் கொடுப்பார்.  நிர்வாகிகள் செய்தது தவறு என தெரியவந்தால் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று இருந்துகொள்வார்.

c

67. பாஜகவை தீவிரமாக எதிர்த்தாலும் அக்கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்து மறைந்து வாஜ்பாய் மீது  தனிப்பெரும் மரியாதை வைத்திருந்தார்

68.  தமிழகம் அதுவரை பார்த்திராத ஸ்டாலினை கடந்த 2016-ல் பார்த்தது. பேண்ட் ஷர்ட் சகிதம் அவர் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

69. திருமணத்தின் போது கோட் சூட் போட்டுதான் உள்ளார்.  பட்டு வேட்டி பட்டு சட்டை அணியவில்லை.

70. வட்ட பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், இளைஞரணி செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என கட்சியில் படிபடியாக வளர்ந்தார்.   எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர், முதல்வர்  என ஆட்சி நிர்வாகத்தில் படிபடியாக வளர்ந்தார்.