`திருச்சியில் காற்றில் பறந்த விதிமீறல்; எங்கே போனது சமூக விலகல்?!’- அமைச்சரே நீங்க இப்படி செய்யலாமா?

 

`திருச்சியில் காற்றில் பறந்த விதிமீறல்; எங்கே போனது சமூக விலகல்?!’- அமைச்சரே நீங்க இப்படி செய்யலாமா?

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்கள் சந்திப்பில் சமூக விலகலை கடைப்பிடியுங்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

`திருச்சியில் காற்றில் பறந்த விதிமீறல்; எங்கே போனது சமூக விலகல்?!’- அமைச்சரே நீங்க இப்படி செய்யலாமா?

கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருச்சி மருத்துவமனையில் நடக்கும் அவலத்தை ஒருவர் வீடியோ எடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அனுப்பி வைத்ததோடு, சுகாதாரத்துறை அமைச்சரும் திடீரென ஆய்வு நடத்திச் சென்றிருக்கிறார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் கண்ணன். இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை முறையாகக் கவனிப்பதில்லை என்று கூறி, மருத்துவமனையில் நடக்கும் அவலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டதோடு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் பர்சனல் நம்பருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். இதையடுத்து, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அமைச்சரின் வருகையால் அங்கிருந்த அதிகாரிகள் பதறிப் போனார்கள். ஒவ்வொரு வார்டாக சென்று அமைச்சர் ஆய்வு நடத்தினார்.

`திருச்சியில் காற்றில் பறந்த விதிமீறல்; எங்கே போனது சமூக விலகல்?!’- அமைச்சரே நீங்க இப்படி செய்யலாமா?

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ”திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் 600 படுக்கைகள் உள்ள நிலையில் அது தற்போது ஆயிரமாக உயர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 45,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அனைத்து உயிர் காக்கும் மருந்துகளும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, அலோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவ முறைகளையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இறப்பு வீதமானது குறைந்து வருகிறது.

`திருச்சியில் காற்றில் பறந்த விதிமீறல்; எங்கே போனது சமூக விலகல்?!’- அமைச்சரே நீங்க இப்படி செய்யலாமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் நமக்கு எதிரி அல்ல. ஆனால் கொரோனா வைரஸ் நமக்கு எதிரி. எனவே தொற்று பாதிக்கப்பட்டவரை அன்புடன் நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் மண்டல அளவில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மருத்துவமனையை பொறுத்த வரையிலும் கொரோனா நோயாளிகளை மருத்துவர்கள் சிறப்பாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள். மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படியே தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பலன் கிடைத்து வருகிறது” என்று கூறினார்.

சமூக விலகலை கடைப்பிடியுங்கள் என்று அடிக்கடி கூறும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 25 நிமிடங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அதனை காற்றில் பறக்க விட்டார். அமைச்சரே இப்படி இருந்தால் எப்படி என்று அதிகாரிகள் முணுமுணுத்தனர். அவர் அமைச்சர் தெரியுமா? மக்களே!