சில நேரங்களில் கடல் பொங்கும் ஆனால் மங்காது! ஈபிஎஸ்- ஓபிஎஸ் விரிசல் குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்

 

சில நேரங்களில் கடல் பொங்கும் ஆனால் மங்காது! ஈபிஎஸ்- ஓபிஎஸ் விரிசல் குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்

அதிமுக கடல் போல் பெரிய ஆளுமையான கட்சி, கடலில் கொந்தளிப்பு வரும், ஆனால் கொந்தளிப்பு வந்தாலும் கடல் அப்படியே தான் இருக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஸ்டாலின் நமது நாட்டின் தலைவர் கிடையாது, அவர் ரஷ்யாவின் தலைவர். முதல்வர் எதை செய்தாலும் ஸ்டாலின் எதிர்க்கிறார். வேளாண் திருத்த மசோதாவில் தவறு இருந்தால் கண்டிப்பாக முதல்வர் எதிர்ப்பார். எதை செய்தாலும் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பு நடத்தும் ஸ்டாலினின் கனவு பழிக்காது. பாஜகவின் கொள்கை மும்மொழி கொள்கை. இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தில் நிலைப்பாடு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணியை விட்டு கொடுக்கலாம், ஆனால் கொள்ளையை விட்டு கொடுக்க முடியாது. கூட்டணி என்பது துண்டு போன்றது, கொள்கை என்பது வேஷ்டி போன்றது” எனக் கூறினார்.

சில நேரங்களில் கடல் பொங்கும் ஆனால் மங்காது! ஈபிஎஸ்- ஓபிஎஸ் விரிசல் குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்

சசிகலா வந்தால் அரசியல் மாற்றம் நிகழுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “எது நடந்தாலும், எப்படி நடந்தாலும், எந்த சூழ்நிலையில் நடந்தாலும் முதல்வரும், துணை முதல்வரும் முடிவு எடுப்பார்கள். அவர்கள் எடுக்கும் முடிவிற்கு அதிமுக தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். நாங்கள் தேர்தலை சந்திக்க பயப்படவில்லை, தேர்தலை தைரியமாக சந்திப்போம். நாங்கள் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறுவோம். வெற்றி பெறுவோம். அம்மா ஆட்சி மீண்டும் அமையும்” எனக் கூறினார்.

முதல்வருக்கும் , துணை முதல்வருக்கும் கருத்து வேறுபாடு உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அதிமுக கடல் போல் பெரிய ஆளுமையான கட்சி, கடலில் கொந்தளிப்பு வரும், ஆனால் கடல் அப்படியே தான் இருக்கும். சில நேரங்களில் கடல் பொங்கும் ஆனால் மங்காது. அது போல் அதிமுக பொங்கும் கடல் போன்றது. ஆனால் அதிமுக எந்த காலமும் அழியாது. மீண்டும் அதிமுக ஆட்சிதான் வரும்” என தெரிவித்தார்.