“தேர்தலுக்கு பின் செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும்”

 
Minister regupathy Minister regupathy

வரும் 4ஆம் தேதிக்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ரகுபதி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். வேறுவிதமான விமர்சனங்களை வைத்தால் அவருடைய பதவிக்கு ஆபத்து. எதிர்க்கட்சி தலைவர் என்ற நிலையிலிருந்து இறங்கி எடப்பாடி பழனிசாமி திமுக அரசை விமர்சிக்கக்கூடாது. பிறந்தநாள் என்பதால் விமர்சனம் வைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி பல்லாண்டு வாழ்க! ஜூன் 4க்கு பிறகு அ.தி.மு.க. மிகப்பெரிய பிளவு ஏற்படும். பிளவை உண்டாக்கும் வேலையை நாங்கள் செய்யமாட்டோம், பாஜக தான் செய்யும். குஜராத்தில் 10 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறுவதே அரிது.

தேர்தலுக்கு பின் செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என செய்திவருகிறது. சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு கிடையாது” என்றார்.