‘தேர்தலில் தோற்றுவிட்டால்’…அதிமுக சசிகலா வசம் செல்லுமா?

 

‘தேர்தலில் தோற்றுவிட்டால்’…அதிமுக சசிகலா வசம் செல்லுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதே வேளையில், தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகளும் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான சர்வேக்கள், வரும் தேர்தல் எதிர்கட்சிக்கு சாதகமாக இருப்பதாகவே கூறுவதால், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் அதிமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

‘தேர்தலில் தோற்றுவிட்டால்’…அதிமுக சசிகலா வசம் செல்லுமா?

இந்த நிலையில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில் பேசிய அவர், தான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தலைவாசலில் உலகத் தரத்தில் பூங்கா அமைத்தேன். சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆடு, மாடு, கோழி, மீன்கள் அங்கு வளர்க்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு பயனளிக்கும். இது தான் அமைச்சராக என்னை பெருமைப்பட வைத்த விஷயம் என உணர்ச்சி பொங்க பேசினார்.

‘தேர்தலில் தோற்றுவிட்டால்’…அதிமுக சசிகலா வசம் செல்லுமா?

இதையடுத்து சசிகலா பற்றி பேசிய அமைச்சர், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு முதல்வர் பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கும் என முடிவெடுத்தோம். அதன் படியே, செயல்பட்டு வருகிறோம். யார் கீழ் இருந்தாலும் விசுவாசமாக இருக்க வேண்டும். தேர்தலில் தோற்று விட்டால் அதிமுக சசிகலா வசம் போகாது. அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

மேலும், ஜெயலலிதா சொன்னதை போல அதிமுக ஆட்சி பல ஆண்டுகள் நீடிக்கும். அந்த அளவுக்கு முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்கிறார். அரசு கேபிள் இலவச திட்டத்தை செயல்படுத்துவது அதிமுக அரசால் மட்டுமே சாத்தியம் என்றும் தெரிவித்தார்.