நிர்வாகிகள் மீது பேப்பரை தூக்கி வீசிய அமைச்சர் பொன்முடி!

 
p


ஓசி பஸ்சுலதான போறீங்க என்று சொன்னதில் இருந்து தொடர்ந்து அமைச்சர் பொன்முடி தான் பங்கேற்கும் கூட்டங்களில் சலசலப்புகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

 திமுகவிற்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சியின் தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கட்சியினர் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.

o
 
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.  

திமுக தலைமை கழகத்தின் மூலமாக புதிய நிர்வாகிகளை பூத்து கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி இருந்திருக்கிறார்கள்.  ஆனால் அந்தந்த பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களையே பூத் கமிட்டி  நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு படிவங்களை பூர்த்தி செய்து அதை அமைச்சர்  பொன்முடி இடம் வழங்கி இருக்கிறார்கள்.

 இதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த அமைச்சர் பொன்முடி அந்த பேப்பரை தூக்கி அவரது முகத்திலேயே எறிந்து,  ஆவேசமாக பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதை பார்த்தது அங்கிருந்து தொண்டர்களிடையே நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது .  காரில் ஏறச் சென்ற பொன்முடி,  புதியதாக மீண்டும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று ஆத்திரத்துடன் சொல்லிவிட்டு சென்றார்.