ஓட்டு போட்டு கிழிகிழின்னு கிழிச்சிட்டீங்க..பெருசா கேட்க வந்துட்டீங்க.. -அமைச்சர் பொன்முடியின் அடுத்த அட்டாக்!
பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் அறிவித்து அது நடைமுறையில் இருக்கிறது. இதை ஒரு கூட்டத்தில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேருந்தில் எப்படி போகிறீர்கள்? எல்லாம் ஓசிதானே ஓசி பஸ்ஸில் தானே போறீங்க என்று பேசினார். இதை கேட்ட பெண்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். ஓசி பயணம் என்று தங்களை இழிவு படுத்துவதாக அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையாக இதை விமர்சித்தனர். பலரும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இதன் பின்னரும் தொடர்ந்து பொன்முடி அடிக்கடி ஏதாவது வாயை கொடுத்து மாட்டிக் கொண்டு வந்து இருந்தவர், தற்போது எனக்கு ஓட்டு போட்டு கிழிகிழின்னு கிழிச்சிட்டீங்க.. பெருசா கேட்க வந்துட்டீங்க என்று மக்கள் மீது ஆத்திரப்பட்டு இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அருங்குறிக்கை கிராமம். இக்கிராமத்தில் அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா நடந்தது. உங்கள் கிராமத்தில் ரோடு வசதி ,மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான் செய்து கொடுத்தேன் என்று பொன்முடி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் எழுந்து நின்று குடிதண்ணீரே வருவதில்லை என்று சொல்ல அடுத்தடுத்து பல பெண்களும் எழுந்து குடிதண்ணீரே வரவில்லை என்று கூச்சல் எழுப்பினர். இதில் ஆத்திரமடைந்த பொன்முடி இந்த அருங்குறிச்சி கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழிகிழிஎன்று கிழிச்சுட்டீங்க. பெருசா கேட்க வந்துட்டீங்க உட்காருங்க என்று எரிச்சலாய் பேசினார்.
அமைச்சரின் இந்த பேச்சால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்ப ட்டது. இதை புரிந்து கொண்ட அமைச்சர் கூட்டத்தை வேக வேகமாக முடித்துவிட்டு அவசரமாக கிளம்பி சென்றிருக்கிறார்