பொம்மணாட்டிக எல்லாம் ஓசியில போறீங்க.. அமைச்சர் பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு

 
p

ஓசில போறீங்க என்று  பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு திட்டத்தை இழிவு படுத்தி பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் அமைச்சர் பொன்முடி.   என் தூக்கத்தை ஏன் கெடுக்குறீங்க? என்று முதல்வர் ஸ்டாலின் வருத்தப்படும் அளவுக்கு அந்த பிரச்சனை பெரிதானது.  பின்னர் அமைச்சர் பொன்முடி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.  

அந்த சர்ச்சை கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில் , தற்போது மீண்டும் அமைச்சர் பன்னீர்செல்வம் அந்த சர்ச்சையை  மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார் . பொம்மனாட்டிக எல்லாம் ஓசியில் போறீங்க.  காசு இல்லாம போறீங்க என்று பேசி இருக்கிறார் .

p

தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள பொம்மிடியில் திமுகவின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்திற்கு வேளாண் மற்றும் உழவர் நலன் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் பங்கேற்றார்.   முன்னாள் அமைச்சர் பழனியப்னும் பங்கேற்றார். இந்த விழாவில் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பேசிய போது,  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்று சொன்னோம்.  அதே போல் ஆட்சிக்கு வந்ததும் திமுக அதை செய்து விட்டது.

 பஸ்ல இப்ப காசு கொடுத்து போறீங்களா இலவசமாக போறீங்களா? இலவசமா பஸ்ல போற தாய்மார்கள் எல்லாம் கை தூக்குங்க.. இருக்கின்ற தாய்மார்கள் எல்லாரும் கை தூக்குங்க.. ஆண்களுக்கு இப்படி வசதி இல்லை. காசு கொடுத்துதான் போகணும்.   பொம்மணாட்டிகள் எல்லாம் ஓசியில் போறீங்க காசு இல்லாம போறீங்க என்று பேசியது  கூட்டத்தில் இருந்த பெண்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. பெண்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.