"கொஞ்சம் பொறுங்க; முதல்வர் ட்ரீட்மென்ட்ட பாப்பீங்க" - அமைச்சர் சொன்ன சீக்ரெட்... பீதியில் ராஜேந்திர பாலாஜி!

 
ராஜேந்திர பாலாஜி

அமைச்சராக இருக்கும்போதே பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமந்துகொண்டு திரிந்தவர் திருவாளர் ராஜேந்திர பாலாஜி. இதனாலேயே சொந்த கட்சி அதிமுகவை விட அவரின் ஆண்டவரான மோடியின் பால் கொண்ட அன்பால் பாஜகவிடமே அதிக விசுவாசமாக இருந்தார். ஆண்டவர் என சொன்னது அவரே. என்ன நடந்தாலும் மேலே (டெல்லி) இருப்பவர் பார்த்துக் கொள்வார். மோடி இருக்கிறார் என கூக்குரலிட்டார். ஆனால் இப்போது அந்த மேலே இருப்பவர் இப்போது உதவவில்லை போல. முன் ஜாமீன் வேண்டி நீதிமன்றங்களுக்கு ஓடோடி திரிகிறார்.

ராஜேந்திர பாலாஜி பாஜக-வுக்குச் சென்றாலும் விட மாட்டோம்!' - அமைச்சர் நாசர்  காட்டம் | minister avadi nassar slams former admk minister rajendra balaji

அவர் மீது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்துவந்தது. புகார்களும் கொடுக்கப்பட்டன. இதையடுத்து அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ் ,பலராமன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதையடுத்து ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்த நிலையில்  அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தமிழ்நாடு காவல் துறை 6 தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறது.

பால்விலை குறைப்பால் தமிழக அரசுக்கு ரூ.270 கோடி நஷ்டம் அமைச்சர் நாசர் தகவல்

இச்சூழலில் நேற்று முன் ஜாமீன் வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இவ்வளவு நாட்களாகியும் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வியெழுந்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் நாசர், "வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல புகார்கள் வந்துள்ளன. பொறுத்திருந்து பாருங்கள். தற்போதைய ஆட்சியில் எதிர்கட்சி மட்டுமல்ல; ஆளுங்கட்சி தவறு செய்தால் கூட முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்றார்.