எம்.ஜி.ஆரின் ஒரே ஆசை! ரசிகர்களுக்கு கே.சி.பி. அழைப்பு!

 
m

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து தான் நின்றபோது அதிமுகவின் மூத்த நிர்வாகியின் முன்னாள் எம்பியுமான கேசி பழனிச்சாமி எம்ஜிஆர் ரசிகர்களை ஒன்று திரட்டி தொடர்ந்து அதிமுகவுக்கு  வலுவூட்டி வருகிறார்.  இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி பிரிவால் தொண்டர்கள் திசை மாறி போய்விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து அதிமுக எம்ஜிஆர் ரசிகர்களிடம் பேசி அவர்களை ஒருங்கிணைத்து வருகிறார் கே.சி பழனிச்சாமி. 

 அந்த வகையில் அவர் இன்று எம்ஜிஆர் ரசிகர்களுக்கு ஒரு அழைப்பு விடுத்திருக்கிறார்.

m

’’இராஜராஜ சோழனின் புகழைப் போலவே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின்  புகழையும் 1000 வருடங்களுக்கு நிலைநாட்டுவோம். எம்.ஜி.ஆர் தான் அதிமுகவின் அடையாளம்.

 பாஜகவை  நிலைநாட்டி வழிநடத்திட  ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் உள்ளன. அதேபோல் அதிமுகவை நிலைநாட்ட எம்.ஜி.ஆர் மன்றங்கள் & ரசிகர்களே  உள்ளனர். அகில இந்தியாவிற்கே வழிகாட்டும் கட்சியாக அதிமுக திகழ வேண்டும். எப்போதெல்லாம்  அதிமுக தடுமாறுகிறதோ, திசைமாறுகிறதோ மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முயல்கிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆரின் விசுவாசிகளாகிய நாம் பாதுகாத்தால் மட்டும் தான் எம்.ஜி.ஆரின் புகழை இன்னும் பல 1000 வருடங்களுக்கு மேல் நிலை நாட்டமுடியும். 

k

கட்சியை நிறுவிய டாக்டர் எம்.ஜி.ஆர் தான் அதிமுகவின் அடையாளம். எம்.ஜி.ஆரின் ஒரே ஆசை அண்ணா படம் பதிந்த அதிமுக கட்சி கொடி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயர்ந்து பறக்க வேண்டும் என்பதே. உலகத்தில் எந்த தலைவரும் செய்திடாத ஒரு செயல்  1000 கோடி மதிப்புள்ள சத்யா ஸ்டூடியோவை அதிமுக என்கிற கட்சிக்கு தனது காலத்திற்கு பின்பு சேர வேண்டும் என்று தன் உயிலில் குறிப்பிட்டவர் எம்.ஜி.ஆர். 

அப்படிப்பட்ட இயக்கம் இன்று எம்.ஜி.ஆர் வகுத்த வழிகளின் படி நடப்பதில்லை . தொண்டர்களுக்கு முக்கியத்துவம் தரும் இயக்கமாகவே  இருக்க வேண்டும். தொண்டர்களால் மட்டும் தான் கட்சியை  நிலை நாட்டை முடியும்’’என்கிறார்.