எம்.ஜி.ஆர். ஆக காட்சி அளித்த எடப்பாடியார்!

 
e

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவின் ஆளுமை மிக்க பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.  அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் . இதை முன்னிட்டு அவர் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் எம்ஜிஆர் மாதிரி தொப்பி,  கூலிங் கிளாஸ் ,  துண்டு போட்டு தொண்டர்களுக்கு எம்ஜிஆர் ஆக காட்சி அளித்தார் . இதை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கம் எழுப்பினர்.

ed

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்பு அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்தது.   இதை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்பட்டது.  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அதிமுக தேர்தல் ஆணையர் அறிவித்தனர்.

 இதை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார்.   அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தொண்டர்கள் , நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.  

பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் , ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற  அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

 அப்போது ஒரு தொண்டர் எம்ஜிஆர் மாதிரியே தொப்பி எம்ஜிஆர் மாதிரியே கூலிங் கிளாஸ், எம்ஜிஆர் அணிந்திருப்பதை போலவே தோளில் துண்டு ஆகியவற்றை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கினார்.  அதையும் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியுடன் வாங்கி அணிந்து கொண்டார்.  அப்போது எம்ஜிஆர் தோற்றத்தில் காட்சியளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதை பார்த்த தொண்டர்கள் உற்சாக முழக்கம் எழுப்பினர்.

 தொண்டர்கள் கொடுத்த அந்த தொப்பி , கூலிங் கிளாஸ், துண்டு ஆகியவற்றை  எடப்பாடி பழனிச்சாமி சிறிது நேரம் அணிந்திருந்தார்