உ.பி.யில் பா.ஜ.க.வை அகற்றினால், 1947ல் நாடு பெற்ற சுதந்திரத்தை விட பெரிய சுதந்திரமாக இருக்கும்.. மெகபூபா முப்தி தாக்கு

 
பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து அகற்றினால், 1947ல் நாடு பெற்ற சுதந்திரத்தை விட பெரிய சுதந்திரமாக இருக்கும் என்று காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்தார்.

ஜம்முவில் நேந்று மக்கள் ஜனநாயக கட்சியின் பழங்குடியின இளைஞர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவி மெகபூபா முப்தி பேசுகையில் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அவர்கள் (பா.ஜ.க.) பாபரையும், அவுரங்கசீப்பையும் மீண்டும் பேசுகிறார்கள். இன்று பா.ஜ.க.வை அகற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பா.ஜ.க.

1947ல் இந்தியா பெற்ற சுதந்திரத்தை விட பெரிய சுதந்திரமாக இருக்கும், ஏனென்றால் அவர்கள் நாட்டை பிரிக்க விரும்பினர். வெளியாட்களுக்கு வேலையும், நிலமும் கொடுக்கிறார்கள், பின்னர் அவர்கள் (பா.ஜ.க.) இது மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். உத்தர பிரதேசத்தில் வளர்ச்சியை காட்டுமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அவர்களால் உத்தர பிரதேசத்தில் மருத்துவமனைகளை வழங்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல்

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மார்ச் 10ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.