உத்தர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பரிதாபகரமான நிலையில் உள்ளது… யோகி அரசை சாடிய மாயாவதி..

உத்தர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பரிதாபகரமான நிலையில் உள்ளது… யோகி அரசை சாடிய மாயாவதி..

உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இது குறித்து கூறுகையில், தனது மகளின் உடல் முழுவதும் சிகரெட் சூடு வைத்த வடுக்கள் உள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்புதான் லக்கிம்பூர் மாவட்டம் இசாநகரில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பரிதாபகரமான நிலையில் உள்ளது… யோகி அரசை சாடிய மாயாவதி..

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: மாநிலத்தில், குறிப்பாக தலித் சமுதாயத்துக்கு எதிரான, அடக்குமுறை, பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட வெட்கக்கேடான சம்பவங்கள், இங்கு சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவரம் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளதை நிரூபணம் செய்கின்றன.

உத்தர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பரிதாபகரமான நிலையில் உள்ளது… யோகி அரசை சாடிய மாயாவதி..

அரசு அதிகாரிகள் அதனை மறைக்க முயற்சிக்கும்போது நிலைமை மோசமாகிறது. அரசு கவனம் செலுத்த வேண்டும். மாநில விவகாரங்களில் முந்தைய சமாஜ்வாடி அரசுக்கும், தற்போதைய பா.ஜ.க. அரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை நடக்கும் கொடூரமான சம்பவங்கள் வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்தது கிடையாது. அந்த நேரத்தில் ஊடகங்கள் இன்று போல் செயலில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.