மக்கள் தங்கள் வாக்குகளை காங்கிரஸூக்கு அளித்து வீணாக்காமல் இருந்தால் நல்லது... மாயாவதி தாக்கு

 
புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

மக்கள் தங்கள் வாக்குகளை காங்கிரஸூக்கு அளித்து வீணாக்காமல் இருந்தால் நல்லது என்று அந்த கட்சியை பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தாக்கினார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பிரியங்கா காந்தி பேட்டி ஒன்றில், நீங்கள் முதல்வர் வேட்பாளரா என்று கேள்விக்கு, காங்கிரஸிலிருந்து வேறு யாரையும் பார்க்கிறீர்களா? என்று பதில் அளித்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளில், நான் (உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸின்) முகம் என்று நான் கூறவில்லை.  நீங்கள் அனைவரும் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டதால் எரிச்சலில் (எல்லா இடங்களிலும் என் முகத்தை பார்க்கலாம்) என்று கூறினேன் என்று தெரிவித்தார். இதனை குறிப்பிட்டு பிரியங்கா காந்தியையும், காங்கிரஸையும் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.

பிரியங்கா காந்தி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி டிவிட்டரில், உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சில மணி நேரங்களிலேயே முதல்வர் வேட்பாளர் (பிரியங்கா காந்தி) தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். மக்கள் தங்கள் வாக்குகளை காங்கிரஸூக்கு அளித்து வீணாக்காமல் இருந்தால் நல்லது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு தலைப்பட்சமாக வாக்களியுங்கள்.

காங்கிரஸ்

உத்தர பிரதேச மக்கள் காங்கிரஸை வாக்குகளை பிரிக்கும் கட்சியாக பார்க்கிறார்கள். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பாடுபடும் ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவாக பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றால், இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடத்தில் உள்ளது என்று பதிவு செய்து உள்ளார்.