முழுமையடையாத திட்டங்களை துவக்கி வைப்பது வாக்கு வங்கியை அதிகரிக்க பா.ஜ.க. உதவாது... மாயாவதி

 
புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு.. புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

முழுமையடையாத திட்டங்களின் துவக்க விழாக்கள்  அந்த கட்சியின் (பா.ஜ.க.) வாக்காளர் எண்ணிக்கையை விரிவுபடுத்த உதவப் போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு சற்று முன், மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் தொடர் அறிவிப்புகள், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், முழுமையடையாத திட்டங்களின் துவக்க விழாக்கள்  அந்த கட்சியின் (பா.ஜ.க.) வாக்காளர் எண்ணிக்கையை விரிவுபடுத்த உதவப் போவதில்லை.

பா.ஜ.க.

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வெளியேற்றப்பட்ட, செயலற்ற மற்றும் சுயநலவாதிகளை  பிற கட்சிகளில்  சேர்த்துக்கொள்வதன் மூலம் எந்த அரசியல் கட்சியும் (சமாஜ்வாடி) பயனடையப்பபோவதில்லை. இது போன்ற அரசியல் கட்சிகளையும், உறுப்பினர்களையும் பொதுமக்கள் நல்ல முறையில் பார்ப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பா.ஜ.க.வுக்கு குட்பை சொன்ன சிரோன்மணி அகாலி தளம்.. தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்தது..

சிரோமணி அகாலி தளம் (100 ஆண்டு)  மிகவும் பழமையான பிராந்தியக் கட்சி  மற்றும் அதன் மாநில (பஞ்சாப்) மக்களுக்கு சேவை செய்திருக்கிறது. எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் சுக்பீர் சிங் பாதல் தலைமையில் சிரோமணி அகாலி தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.