உ.பி.யில் நலிந்த பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை.. பா.ஜ.க.வை தாக்கிய மாயாவதி உ.பி.யில் நலிந்த பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை.. பா.ஜ.க. அரசை தாக்கிய மாயாவதி

 
புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

உத்தர பிரதேசத்தில் நலிந்த பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்று பா.ஜ.க. அரசை மாயாவதி தாக்கினார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவியும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் நலிந்த பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. இது போன்ற சம்பவங்கள் குறித்து பல ஊடகங்களில் செய்திகளை நாம் பார்க்க முடியாது. ஊடகங்களை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது மாநில அரசுக்கு தெரியும். 

அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் புறக்கணிக்கப்பட்டோரின் மேம்பாட்டுக்காக பாடுபட்டார். இன்று மத்திய மற்றும் மாநில (பா.ஜ.க.) அரசுகளின் அக்கறையின்மையால் அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் அவர்களுக்கு (நலிந்த பிரிவினர்)  அளிக்கப்பட்ட சலுகைகளை அவர்களால் பெற முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பா.ஜ.க., சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி கிட்டத்தட்ட தனது கூட்டணி கட்சிகளை உறுதி செய்து விட்டது, தொகுதி பங்கீடு மட்டுமே எஞ்சியுள்ளது.