ஒற்றை தலைமைக்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி- மருது அழகுராஜ்

 
maruthu alaguraj

தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்களிடையே மனமாற்றாம் ஏற்பட்டுள்ளதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ், “ஓபிஎஸ்-ன் நிலைப்பாடுதான் நியாயமானது என தொண்டர்கள் அறிந்துள்ளனர். ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டாக்கியவர் ஜெயக்குமார். அதிமுக பிளவால் திமுக தேர்தல்களில் வெல்லும் என்பது தான் வரலாறு சொல்லும் பாடம். எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தலைமை கழகம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதிமுக தலைமை கழகம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஒரு மெளன புரட்சி தொடங்கியுள்ளது.

ஓ பன்னீர்செல்வம் ஒற்றுமைக்கு கூக்குரல் விடுத்தார். மனசாட்சி உள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடைக்கோடி தொண்டர்களும் ஓபிஎஸ்- ந் நிலைபாடுதான் நியாயமானது என ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளனர். இதனால் பலரும் எடப்பாடியை விட்டு விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. இதற்காகவே அவசரக் கூட்டத்தை கூட்டி எடப்பாடி பழனிசாமி பட்டுவாடா செய்தார். அப்படி கொடுக்கப்பட்ட பணத்தில்தான் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-ஐ அரசியல் போலி என்றால், அது ஜெயலலிதாவையும் சேர்த்து சொல்வதுபோல் உள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜெயக்குமார் ஓபிஎஸ்-ஐ பற்றி பேச தகுதியில்லை. அதிமுகவை ஜெயக்குமார் அழிக்க நினைக்கிறார். மக்களால் அங்கிகரீக்கப்பட்டவர்கள் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்.எடப்பாடி பழனிசாமி பொது அறிவு அற்றவர். ஒற்றை தலைமைக்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி.ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் பன்னீர்செல்வம்” எனக் கூறினார்.