#BREAKING திமுகவில் இணையும் மருது அழகுராஜ்

 
‘அநீதி புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சரி, நீங்கள்….’ திமுகவைச் சீண்டும் ‘அதிமுக’ மருது அழகுராஜ் ‘அநீதி புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சரி, நீங்கள்….’ திமுகவைச் சீண்டும் ‘அதிமுக’ மருது அழகுராஜ்

முன்னாள் அதிமுக பிரமுகர் மருது அழகுராஜ் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டமிட்டு ஓ.பி.எஸ்-ஐ அவமானப் படுத்தினர்: மருது அழகுராஜ் புகார்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ (முன்னாள்) நாளேடான நமது எம்ஜிஆர் ஆசிரியரும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளருமான மருது அழகுராஜ் இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக போட்டியிட்ட மருது அழகுராஜ், நமது அம்மா எனும் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நாளிதழில் 2018 முதல் 2022 வரை தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் சிறந்த தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார்