அதிமுக வழக்கு- நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்புலமாக பிரதமர் இருக்கிறார்- மருது அழகுராஜ்

 
maruthu alaguraj

ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி தரப்பு கூறிவரும் நிலையில், அதிமுக கொடியை நாங்கள் சட்டையாகக் கூட தைத்து போட்டுக் கொள்வோம் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை.. எடப்பாடிக்கு ரிவிட் அடிக்க ரீ என்டரி  கொடுக்கும் மருது அழகுராஜ்..!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை  விவகாரத்தால் எடப்பாடி பழனிச்சாமி விஸ்வரூபம் எடுத்து கட்சி மொத்தத்தையும் தனக்கு கீழ் கொண்டு வந்து விட்டார். அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் ஆகிவிட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த சட்டப் போராட்டம் ஒருவேளை தோல்வியில் முடியும் என்று நினைத்து தான் முன்னதாகவே தனது பலத்தை நிரூபிக்க முடிவு எடுத்து விட்டார் ஓபிஎஸ். இதற்காக திருச்சியில் வரும் 24 ஆம் தேதி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டின் மூலம் அதிமுகவில் இருக்கும் தனது ஆதரவாளர்களை தன் பக்கம் இழுத்து தன் பலத்தை காட்ட நினைக்கிறார். 

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும், ஓபிஎஸ் அணியின் மாநில செய்தி தொடர்பாளருமான மருது அழகுராஜ்,  காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அதிமுகவின் அதிபர் எடப்பாடி பழனிசாமிதான் என எந்த உரிமையும் இன்னும் அவருக்கு தரவில்லை. அதிமுக கொடியை சட்டையாகக்கூட தைத்து போட்டுக் கொள்வோம்,  யாரும் கேள்வி கேட்க முடியாது. நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்புலமாக பிரதமர் இருக்கிறார். விசாரணையின் போது எடப்பாடிக்கு எதிராக கேள்விகளை கேட்டும் நீதிபதிகள் தீர்ப்பின்போது மட்டும் எடப்பாடிக்கு தேவையான நேரத்தில் தேவையான தீர்ப்பை வழங்கும் மர்மம் என்னவென்று குழப்பமாக இருக்கிறது” என்றார்.