"பாஜகவிடம் நான் பணம் வாங்கியிருந்தால் என் தலையை இரண்டாக வெட்டுங்கள்"- மன்சூர் அலிகான்

 
mansoor ali khan

அரிசி மூட்டையில் மாட்டிய எலி போல் என்ன செய்வது என்று தெரியாமல் மாநிலங்களுக்கு ஏற்றவாறு பொய்களை கூறி வருகிறார் பிரதமர் மோடி என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

 

“கொரோனாவா அப்டினு ஒன்னு இல்லவே இல்ல” – மன்சூர் அலிகானின் அடுத்த குண்டு!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை விடுமுறை கொண்டாட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வரக்கூடிய நிலையில் கொடைக்கானலில் ஓய்வுக்காக தங்கி இருக்கிறார் மன்சூர் அலிகான்... அங்கு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “வேலூர் பக்கமாக இருப்பதால் அங்கு போட்டியிட்டேன். மத அடிப்படையில் நான் வேலூரில் போட்டியிடவில்லை. வேலூரில் வேட்பாளராக அறிமுகம் ஆன பொழுது எனக்கு சாதகமாக சிலர் அதிமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு வேலை பார்த்தனர். 

பின்னர் ஒரு சிலர் பாஜகவிடம் நான் பணம் பெற்றுக் கொண்டதாக பொய்களை பரப்பி வந்த நிலையில் அப்படி பாஜகவிடம் பணம் பெற்று இருந்தால் கோடாலியால் என்னுடைய தலையை இரண்டாக வெட்டுங்கள். சாக்கு மூட்டையில் மாட்டிய எலி போல் பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலங்களுக்கு போய் பொய்களை பேசி வருகிறார். Evm மிஷின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. தற்போது நடைபெற்று வரக்கூடிய தேர்தலில் அரசியலில் பாஜகவிற்கு நெருக்கடி ஏற்படுவது போல் பல நாடகங்களை நடத்தி இறுதியில் evm மிஷினை வைத்து தாங்களே வெற்றி பெறுவார்கள்.. அண்ணாமலை அண்ட புளுகு ஆகாச புளுகு போல் பொய் பேசி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r

பிரதமர் மோடி பொய்களை பேசி குஜராத்திகளை முன்னேற்றி வருகிறார். பெரியாரிசம் உலகம் முழுக்க கொண்டு சென்று இருந்தால் இந்த கேடுகெட்ட நிலைமை வந்திருக்காது. பாஜக மத வெறியை கிளப்புகிறது. EVM  மிஷின் முறை இருக்கும் வரை அவர்களே வெற்றி பெறுவார்கள்” என்றார்.