2 முறை முதல்வர், துணை முதல்வர், அதிமுக பொருளாளர், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்-க்கு பதவி ஆசையா?

 
op

சிவகாசி நேரு சாலையில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ்பாண்டியன் பங்கேற்றார். 

Ex-AIADMK Leader Questio

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் ஒன்றாம் தேதி பூலித்தேவன் பிறந்த தின விழாவில் பங்கேற்க, தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விருதுநகர் மாவட்டம் வழியாக  செல்கின்ற  போது கட்சித் தொண்டர்கள் அவரை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டியும், பேனர்கள் வைத்தும், சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பின்னால் தான் உள்ளனர். அவர் எங்கே சென்றாலும் தொண்டர்கள் கூட்டமும், கட்சியினர்களின் வரவேற்பும், ஓபிஎஸ்க்கு தான் உள்ளது. அதிமுக ஒன்றிணைய வேண்டும், ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என்ற ஓபிஎஸ்-இன் குரல் அனைத்து தொண்டர்களின் மனதிலும் பாதிப்பு ஏற்படுத்தி, அதிமுக ஓபிஎஸ் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட  வேண்டுமென  அனைவருடைய மனதிலும் எண்ணமாக உள்ளது. அதிமுக தொண்டர்களின் விருப்பம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அதிலிருந்து தனித்து நிற்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். 

முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருப்பார். அதிமுக  ஒன்றிணைய வேண்டும், ஜெயலலிதாவின் எண்ணம் போல் 100 ஆண்டுகள் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்-இன் நோக்கமாக உள்ளது. அதிமுக கட்சிக்கொடியும், இரட்டை இலை சின்னமும் ஓபிஎஸ்-இடம் உள்ளதால் அதை நாங்கள் கைப்பற்ற தேவையில்லை. அதிமுக சிறிதளவு கூட பிளவுபடாமல் ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்-இன் விருப்பம் தான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. ஓபிஎஸ் அனைத்து பதவிகளையும் வகித்து பார்த்து விட்டார்.  ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராகவும், துணை முதல்வராகவும், அதிமுக பொருளாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும், இருந்த அவருக்கு பதவி ஆசை இருக்க முடியுமா?” எனக் கூறினார்.