பதவிவெறி பிடித்த மனிதனே..!நாங்க என்ன சொன்னாலும் இப்போது உங்க அறிவுக்கு ஏறாது - இபிஎஸ்சை விளாசும் ஓபிஎஸ் மகன்

 
j

 அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவின் பிரிந்த அணிகள் ஒருங்கிணைந்த அணியாக மாறும் என்று பாஜக மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த நிலையில்,  அதிமுகவின் பிரிந்த அணிகள் இனி இணைய வாய்ப்பே இல்லை என்பது போல் நாளுக்கு நாள் மோதல் உச்சகட்டத்தை சென்று கொண்டிருக்கிறது.  ஓபிஎஸ் ஆதரவாளர் சட்டசபையில் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு தனது ஆவேசப் பாய்ச்சலை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மீது காட்டி இருக்கிறார்.

e

இதுவரைக்கும் வாய் வார்த்தையாக இருந்த மோதல் இனி கைகலப்பிற்குச் சென்று விடுமா என்கிற அச்சம் எழுந்திருக்கிறது அதிமுக தொண்டர்களுக்கு . அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை சேர்ந்து கொள்வது இல்லை என்பதில் எடப்பாடி பழனிச்சாமி ரொம்பவே பிடிவாதமாக இருக்கிறார்.

 இந்த நிலையில் இது குறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தனது வலைதள பக்கத்தில்,  ‘’காலைப் பிடித்து பதவி வாங்கி,  பதவி வாங்கி பணத்தை சேர்த்து, சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி, கூட்டத்தை வைத்து பதவி பெற  நீதியை நிதியால் வளைத்து,  பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி, தொடர் எட்டு தேர்தல் தோல்விகளால் மக்கள் பாடம் புகட்டினாலும், தனது சுயநலமே பெரிதான கருதி இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவிவெறி பிடித்த மனிதனே...  தற்போது நாங்கள் என்ன சொன்னாலும் தங்களது அறிவுக்கு ஏறாது. உங்களை சூழ்ந்து இருக்கும் பதவியும் பணமும் உங்களை விட்டு நீங்கும்போது உண்மை தன்மை புரியவரும்; தான் செய்தது தவறு என்று தெரிய வரும்.

 அத்தகைய காலத்தினால் வழங்கப்படும் இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளோடு போராடி பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்..... கடைக்கோடி உண்மை தொண்டன்’’ என்று பதிவிட்டு இருக்கிறார்.