தேர்தல் நேரம் வரும் போது கங்கையில் நீராடுகிறார், கோயிலில் தவம் செய்கிறார்.. மோடியை தாக்கிய மம்தா பானர்ஜி

 
பிரதமர் மோடி பிரதமர் மோடி

தேர்தல் நேரம் வரும் போது பிரதமர் மோடி கங்கையில் நீராடுகிறார், கோயிலில் தவம் செய்கிறார் என்று மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்

கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அங்கு பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: ஒரு குஜராத்தியால் நாடு முழுவதும் செல்ல முடியும் என்றால், ஒரு பெங்காலியால் ஏன் அது முடியாது? நான் பெங்காலி என்று சொல்லப்படுகிறது. அப்புறம் அவர் யார்? அவர் குஜராத்தியா? அவர் குஜராத்தி என்பதால் இங்கு (கோவா) வர முடியாது என்று சொல்லி விட்டோமா? ஒரு பெங்காலி தேசிய கீதம் எழுத முடியும் ஆனால் ஒரு பெங்காலி கோவாவுக்கு வர முடியாதா? நாம் அனைவரும் காந்திஜியை மதிக்கிறோம். காந்திஜி ஒரு வங்காளியா அல்லது வங்காளி அல்லாதவரா அல்லது கோவானியரா அல்லது உத்தர பிரதேசத்தை சேர்ந்தவரா  என்று நாம் எப்போதாவது கேள்வி எழுப்பியிருக்கிறோமா? ஒரு தேசிய தலைவர் அனைவரையும் அழைத்து செல்பவர். 

மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் அதன் தலைவர்களை ரிமோட் கண்ட்ரோல் செய்ய கோவாவில் இல்லை. ஆனால் அவர்களுக்கு ஆதரவாக இருந்தது. அவர்கள் தேசிய தலைவர்களாக இருப்பார்களா? கோவாவை குஜராத்தில் இருந்து நடத்துகிறார்கள். கோவா குஜராத் அல்லது டெல்லியில் இருந்து இயக்கப்படாது. கோவா மக்கள் கோவாவை இயக்குவார்கள். பா.ஜ.க.விடம் இருந்து எனக்கு கேரக்டர் சான்றிதழ் தேவையில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் கங்கை கரைக்கு சென்று பூஜை செய்ய மாட்டோம். 

கங்கை

தேர்தல் நேரம் வரும்போது மோடிஜி கங்கையில் நீராடுகிறார். அவர் உத்தரகாண்டில்  ஒரு கோயிலில் தவம் செய்கிறார். தேர்தல் நேரம் வரும் போது அவர் பூசாரி ஆகிவிடுவார். அவர் இருக்கட்டும். அதற்கான சுதந்திரம் அவருக்கு இருக்கிறது. ஆனால் ஆண்டின் எஞ்சிய நாட்கள் அவர் எங்கே? உத்தர பிரதேச அரசு கோவிட்டால் இறந்தவர்களின் உடல்களை ஆற்றில் வீசுகிறது. அன்னை கங்கையை தூய்மையற்றவர்களாக  ஆக்கினார்கள். கோவிட் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை  (தரவு) அவர்களிடம் இல்லை. நாங்கள் கங்காவை எங்கள் தாய் என்று அழைக்கிறோம். பா.ஜ.க.வினர் கோவிட்டால் இறந்த உடல்களை கங்கையில் வீசியுள்ளனர். இது எங்களுக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.