ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை- மம்தா பானர்ஜி.. தலைமைக்கு வலுவான மாற்று தேவை- சரத் பவார்

 
மம்தா

ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை என்று காங்கிரஸை  மம்தா பானர்ஜி மறைமுகமாக தாக்கினார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமையன்று 3 நாள் பயணமாக மும்பை  சென்றுள்ளார். மும்பையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். அதன் பிறகு மம்தா பானர்ஜியும், சரத் பவாரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ன? இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை. 

பா.ஜ.க.

நடந்து கொண்டிருக்கும் பாசிசத்திற்கு எதிராக யாரும் போராடாத நிலையில் உறுதியான மாற்றுப் போக்கை உருவாக்க வேண்டும். சரத் பவார் ஜி மூத்த தலைவர், நான் எங்கள் அரசியல் கட்சிகளை பற்றி விவாதிக்க வந்தேன். சரத் பவார் ஜி என்ன சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பா.ஜ.க.வுக்கு எதிரான முன்னணியில் காங்கிரஸ் சேர்த்து கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதிலளிக்கையில், காங்கிரஸாக இருந்தாலும் சரி, வேறு எந்த கட்சியாக இருந்தாலும் சரி பா.ஜ.க.வுக்கு எதிரானவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் அவர்களை வரவேற்கிறோம். 

சரத் பவார்

தலைமைக்கு வலுவான மாற்று தேவை. எங்கள் சிந்தனை இன்றைக்காக அல்ல, தேர்தலுக்கானது. இது  நிறுவப்பட வுண்டும், அந்த நோக்கத்துடன் மம்தா வருகை தந்தார். எங்கள் அனைவருடனும் மிகவும் நேர்மறையான கலந்துரையாடலை நடத்தினார் என்று தெரிவித்தார்.