வங்காளம் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்காது... மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

வங்காளம் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்காது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும், நேதாஜி தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடினார். மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: 

நேதாஜி

வங்காளம் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்காது. இந்த உண்மையை பற்றி நான் பெருமைப்படுகிறேன். வங்காளத்திற்கு ஏன் இவ்வளவு ஒவ்வாமை? நீங்கள் பெங்கால் அலங்கார ஊர்தியை நிராகரித்தீர்கள். நாங்கள் உங்களுக்கு அழுத்தம் கொடுத்ததால் (டெல்லியில்) நேதாஜி சிலையை உருவாக்குகிறீர்கள்.

பா.ஜ.க.

நேதாஜி எங்கிருக்கிறார் என்பது இன்று வரை எங்களுக்கு தெரியவில்லை. அவர்கள் (மத்திய பா.ஜ.க. அர) தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதற்கான வேலைகளை செய்வோம் என்று சொன்னார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. உண்மையில் நேதாஜி போஸ் பற்றிய அனைத்து கோப்புகளையும் நாங்கள் (மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு) வெளியிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.