எதிர்கட்சி தலைவர்களை உளவு பார்ப்பதன் மூலம் அரசாங்கம் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறது.. காங்கிரஸ்

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

எதிர்க்கட்சி தலைவர்கள், நீதித்துறை, பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகளை உளவு பார்ப்பதன் மூலம் அரசாங்கம் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்று மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே காங்கிரஸ் பெகாசஸ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் பெகாசஸ் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானத்தை முன்வைத்துள்ளோம். இந்த அரசாங்கம் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் மக்களை தவறாக வழிநடத்துகிறது.

பெகாசஸ் சாப்ட்வேர் விவகாரம்

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறியதாவது: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம். இதனால் மழைக்கால கூட்டத்தொடர் பாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கவில்லை என்று ஆளும் கட்சி (பா.ஜ.க.) கூறியது. ஆனால் உண்மை வெளிவந்துள்ளது.

மேற்கு வங்க காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க முயற்சி… தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமனம்..

நாங்கள் இந்த பிரச்சினையை எழுப்புவோம். அதை எப்படி முன்னெடுத்து செல்வது என்பதை எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். பெகாசஸ் விவகாரம் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை, பேச்சு சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள், நீதித்துறை, பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகளை உளவு பார்ப்பதன் மூலம் அரசாங்கம் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.