எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்த சதி.. மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜூன் கார்கே

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்கட்சிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்ததை, எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சதி என்று மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஒழுங்கீனமான நடந்த கொண்ட எம்.பி.க்கள் பிரியங்கா சதுர்வேதி உள்பட மொத்தம் 12 எம்.பி.க்கள்  இந்த கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், இந்த விவகாரம் குறித்து நேற்று விவாதிக்க சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

மத்திய அரசு

ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கூட்டத்துக்கு அழைக்கததால் அந்த கூட்டத்தை அந்த கட்சிகள் புறக்கணித்தன. இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், 4 எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சதி. இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுப்பட்டுள்ளன. அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைக்குமாறு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்று தெரிவித்தார்.

ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

நாடாளுமன்ற மக்களவையின் காங்கிரஸ் தலைவரான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், மக்களவையை எப்படி நடத்த வேண்டும் என்பது அரசாங்கத்தை பொறுத்தது. மாநிலங்களவை விவகாரம் என்பதால் அரசாங்கம் எங்களை எந்த கூட்டத்துக்கும் அழைக்கவில்லை. லக்கிம்பூர் கெரி விவகாரத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் ராஜினாமா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிவித்தார்.