மாநிலங்களவை தலைவருக்கு எந்த விதியையும் ரத்து செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால் அரசாங்கம் தடுக்கிறது.. காங்கிரஸ்

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

மாநிலங்களவை தலைவருக்கு எந்த விதியையும் இடைநிறுத்தவோ, உத்தரவு பிறப்பிக்கவோ அல்லது ரத்து செய்யவோ முழு அதிகாரம் உள்ளது. ஆனால் அரசாங்கம் அதை செய்ய விடவில்லை என்று மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஒழுங்கீனமான நடந்த கொண்ட எம்.பி.க்கள் ரிபுன் போரா, பிரியங்கா சதுர்வேதி, பினோய் விஸ்வம் உள்பட மொத்தம் 12 எம்.பி.க்கள்  இந்த கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இடை நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பிரியங்கா சதுர்வேதி
இந்நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அலுவலகத்தில் இரு அவைகளிலும் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று காலையில் கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் 12 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை திரும்ப பெறக் கோரி நடத்தி வரும் போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் விவாதித்தனர்.

ரிபுன் போரா

இந்த கூட்டத்துக்கு பிறகு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலங்களவை தலைவருக்கு எந்த விதியையும் இடைநிறுத்தவோ, உத்தரவு பிறப்பிக்கவோ அல்லது ரத்து செய்யவோ முழு அதிகாரம் உள்ளது. ஆனால் அரசாங்கம் அதை செய்ய விடவில்லை. இடைநீ்க்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களை மீண்டும் சபைக்கு அழைத்து வருவதற்குது தனது அதிகாரத்தை பயன்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.