மசோதாக்கள் எளிதாக நிறைவேற்ற 12 எம்.பி.க்களை அரசு வேண்டுமென்றே இடைநீக்கம் செய்தது... மல்லிகார்ஜூன் கார்கே

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

மசோதாக்கள் எளிதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக 12  எம்.பி.க்களை அரசு வேண்டுமென்றே இடைநீக்கம் செய்தது என்று மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் எம்.பி.யும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே கூறியதாவது: மசோதாக்கள் எளிதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக 12  எம்.பி.க்களை அரசு வேண்டுமென்றே இடைநீக்கம் செய்தது. அவை சுமூகமாக நடைபெறுவதற்காக இடைநிறுத்தத்தை திரும்ப பெறுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம்.ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள்

இப்போது அவர்கள் அதற்கு எதிர்க்கட்சியை குற்றம் சாட்டுகிறார்கள். அவையின் செயல்பாட்டை தடுக்கும் முயற்சி வேண்டுமென்றே செய்யப்பட்டது. சீனா, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அல்லது மத்திய உள்துறை இணையமைச்சர் டேனி  போன்ற பிரச்சினைகளை எழுப்பப்படுவதை அவர்கள் (மத்திய அரசு) விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஒழுங்கீனமான நடந்த கொண்ட எம்.பி.க்கள் ரிபுன் போரா, பிரியங்கா சதுர்வேதி, பினோய் விஸ்வம் உள்பட மொத்தம் 12 எம்.பி.க்கள்  இந்த கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும் இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று வரை போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.