மோடி பா.ஜ.க.வுக்கு விளம்பரம் செய்வது போல் இதற்கு முன் எந்த பிரதமரும் தனது கட்சிக்கு விளம்பரம் செய்ததில்லை.. கார்கே

 
மோடி

பிரதமர் மோடி பா.ஜ.க.வுக்கு விளம்பரம் செய்வது போல் இதற்கு முன் எந்தவொரு பிரதமரும் தனது கட்சிக்கு விளம்பரம் செய்ததில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவிட்-19 மூன்றாவது அலை உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதால், உலக தலைவர்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால் அதை (கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தடுப்பூசி தொடர்பாக உரையாற்றியது குறித்து) பற்றி பேச எதுவும் இல்லை.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க.வுக்கு விளம்பரம் செய்வது போல் இதற்கு முன் எந்தவொரு பிரதமரும் தனது கட்சிக்கு விளம்பரம் செய்ததில்லை. என்ன சாப்பிட வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று சமானியர்களுக்கு கட்டளையிடுவதற்கு பதிலாக அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக செய்வது பற்றி ஒரு தலைவர் சிந்திக்க வேண்டும். 

பா.ஜ.க.

ஒவ்வொரு நாளும் தேர்தல் பிரச்சாரத்துக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்று பிரதமர் கூறுகிறார், ஆனால் அவர் எல்லா நாட்களிலும் நாடாளுமன்றத்தில் இல்லாமல் இருப்பதை தேர்ந்தெடுத்தார். மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது, அவர் வந்து அதை குறைத்திருக்கலாம் ஆனால் அவர் (மோடி) அதனை செய்யவில்லை. அடுத்த முறை (2024ல் மக்களை தேர்தலில்) பா.ஜ.க. மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் நமது அரசியலமைப்பை திருத்த முயற்சி செய்வார்கள், அது சாமானியனின் பேச்சு சுதந்திரத்தை நேரடியாக பாதிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.