“ஸ்டாலினை எதிர்த்து கமல் போட்டி” சுத்தமான இடத்தில் நிற்பேன் என நக்கல்!

“ஸ்டாலினை எதிர்த்து கமல் போட்டி” சுத்தமான இடத்தில் நிற்பேன் என நக்கல்!

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நாய் ஜாக்கிரதை என்று போர்டு வைப்பதுபோல எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று வாசலில் போர்டு வையுங்கள் . அதை வைத்துதான் இவர்கள் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் . வாக்குறுதிகளும் , கட்டிய கட்டிடங்களும் இடிந்து விழுகின்றன.

“ஸ்டாலினை எதிர்த்து கமல் போட்டி” சுத்தமான இடத்தில் நிற்பேன் என நக்கல்!

நம்முடைய எதிர்காலம் இருண்டு போய் கிடக்கிறது .பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறுகிறார்கள் . மக்களிடம் அதிக பணத்தை வசூலிக்கிறார்கள். தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என்று பிரச்சாரம் செய்கிறார்கள் .கூகுள் செய்து பார்த்தேன் . கூகுள் பார்த்த பிறகுதான் தெரிகிறது எத்தியோப்பியா நாட்டில் தமிழகம் வெற்றி நடைபோடுகிறது” என்றார்.

“ஸ்டாலினை எதிர்த்து கமல் போட்டி” சுத்தமான இடத்தில் நிற்பேன் என நக்கல்!

தொடர்ந்து பேசிய அவர் , மு க.ஸ்டாலின் நிற்கும் இடத்தில் நான் நிற்க மாட்டேன் . நான் கொஞ்சம் சுத்தமான இடத்தில் நிற்கப் போகிறேன் . திமுகவை அகற்ற வேண்டிய காலம் இது தான் . திமுக அகல வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.