2024ல் மக்களவை தேர்தலில் தாமரை 418 இடங்களில் வெற்றி பெறும்.. மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர் நம்பிக்கை

 
பா.ஜ.க.

2024ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 418 இடங்களில் வெற்றி பெறும் என்று மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர்  சந்திரகாந்த் பாட்டீல் நம்பிக்கை தெரிவித்தார்.

மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தேசியவாத காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேலும் பா.ஜ.க.வை தடுக்க காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் சிவ சேனா கைகோர்த்தது.  அதை யாரும் தடுக்கவில்லை என்பதால் அவர்கள் மிகவும் சுதந்திரமாக அதை செய்கிறார்கள்.  இருப்பினும் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் தங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்து வருகின்றனர். 

சரத் பவார்

நாங்கள் வளர்ச்சி பாதையில் இருக்கிறோம். விரைவில் புதிய மெட்ரோவை திறந்து வைக்க பிரதமர் புனே வருவார். எதிர்கட்சிகளை போல அரசியலில் எங்களுக்கு அக்கறை இல்லை. வரவிருக்கும் பொதுத் தேர்தலை (நாடாளுமன்ற தேர்தல்) பொறுத்தவரை, பல்வேறு கணிப்புகள் மற்றும் ஆய்வுகள் உள்ளன. எங்களின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 418 இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சந்திரகாந்த் பாட்டீல்

சந்திரகாந்த் பாட்டீல் கடந்த சில தினங்களுக்கு முன் புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தாவை சந்தித்தார். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கோவிட் நெறிமுறைகளில் சில தளர்வுகளை அனுமதிக்குமாறு காவல்துறை ஆணையரிடம் சந்திரகாந்த் பாட்டீல் வேண்டுகோள் விடுத்தார்.