ஓபிஎஸ்க்கு பழைய பாசத்தை காட்டிய மாஜிக்கள்! அதிமுகவில் சலசலப்பு
என்னதான் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாக ஆகிவிட்டாலும் கூட, எடப்பாடி அணியில் இருப்போருக்கு ஓபிஎஸ் மீது பழைய பாசம், மரியாதை இருக்கத்தான் செய்கிறது. அதுதான் இப்போது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் கடுமையாக விமர்சித்துக் கொள்கின்றனர். இருவர் அணியில் இ இருப்பவரும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள் .
திமுகவின் பி டீமாக அதிமுகவில் இருந்து செயல்பட்ட பச்சோந்தி என்று ஓபிஎஸ்ஐ கடுமையாக வசைபாடி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும். பதிலுக்கு துரோகி என்று எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
இந்த நிலையில் எடப்பாடி அணியில் இருக்கும் மாஜிக்கள் ஓபிஎஸ்-க்கு எழுந்து நின்று பவ்யமாக வணக்கம் வைத்திருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா விற்கு முன்னாள் முதல்வர் என்கிற முறையில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது . அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், வளர்மதி ஆகியோரும் அந்த நிகழ்வில் பங்கேற்று உள்ளார்கள் .
அந்த நிகழ்விற்கு ஓபிஎஸ் வந்ததும், திமுக அமைச்சர்கள் வரிசையாக எழுந்து நின்று அவரை கைகொடுத்து வரவேற்றுள்ளார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் , வளர்மதி இருவரும் எழுந்து நின்று ஓபிஎஸ்-க்கு வணக்கம் வைத்திருக்கிறார்கள். முதலில் அதை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் ஓபிஎஸ். அவர் தங்களை கவனிக்கும் வரைக்கும் இருவரும் வணக்கம் வைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.
என்னதான் எதிரும் புதிருமாக ஆகிவிட்டாலும் எகிறி அடித்து விமர்சனம் செய்து கொண்டாலும் பழைய பாசமும் பணிவும் ஓபிஎஸ் மீது மாஜிக்களுக்கு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது . இது அதிமுகவில் சிலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.