“அமமுகவை இணைத்துதான் வெற்றிபெற வேண்டும் என்ற அவசியம் அதிமுகவுக்கு இல்லை”

 

“அமமுகவை இணைத்துதான் வெற்றிபெற வேண்டும் என்ற அவசியம் அதிமுகவுக்கு இல்லை”

அமமுகவை இணைத்துதான் வெற்றிபெற வேண்டும் என்ற அவசியம் அதிமுகவுக்கு இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடிரென வந்து வேகமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றார். நல்லாட்சி தருவேன் என்று கூறி, அறிக்கையெல்லாம் வெளியிடுகிறார்கள். ஆனால், திமுக பற்றி ஒரு வார்த்தை கூட கமல்ஹாசன் பேசவில்லை. ஊழலின் ஒட்டு மொத்த உருவமாக இருப்பது திமுகதான்.

“அமமுகவை இணைத்துதான் வெற்றிபெற வேண்டும் என்ற அவசியம் அதிமுகவுக்கு இல்லை”

வாரிசு அரசியல் என்றாலே திமுக தான் என்று பேசப்படும் காலத்தில், ஒரு வார்த்தை கூட திமுக குறித்து கமல்ஹாசன் பேசாதது ஏன்? கமல்ஹாசன் திமுகவில் பி- டீம். அமமுகவை இணைத்துதான் வெற்றிபெற வேண்டும் என்ற அவசியம் அதிமுகவுக்கு இல்லை” எனக் கூறினார்.