விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்… மத்திய பிரதேச அரசு

விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்… மத்திய பிரதேச அரசு

பி.எம். கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இது தொடர்பாக டிவிட்டரில், விவசாயிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஆர்.சி.பி. 6 (4), பி.எம். கிசான் சம்மன் நிதி, ஜீரோ விகிதத்தில் கடன், பிரதமர் பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம்.

விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்… மத்திய பிரதேச அரசு
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

இந்த திட்டத்தின்கீழ், பிரதமர் சம்மன் நிதியன்கீழ் உள்ள தகுதியான பயனாளி விவசாய குடும்பங்களுக்கும் ஒரு நிதியாண்டில் இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். விவசாயிகளின் நலன் எனது வாழ்க்கையில் குறிக்கோள் என பதிவு செய்து இருந்தார்.

விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்… மத்திய பிரதேச அரசு
நரோட்டம் மிஸ்ரா

இது தொடர்பாக அம்மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பி.எம்.கிசான்) திட்டத்தின்கீழ், மத்திய பிரதேச அரசு விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் மத்திய அரசு தனது பங்களிப்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. தற்போது மத்திய அரசு மேலும் ரூ.4 அயிரம் வழங்கும் என அறிவித்துள்ளதால் ஒட்டு மொத்தத்தில் மத்திய பிரதேச விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கிடைக்கும் என தெரிகிறது.